செய்திகள் | திரைப்பிரபலங்கள்

திரை உலாவின் தேடலில் இன்றைய திரைப் பிரபலம் – குரலால் வசீகரித்த‌ நடிகர் அர்ஜுன் தாஸ்(Tamil Actor Arjun Das)

Tamil Actor Arjun Das

தனது வசீகரமான குரல் மூலம் அனைவரினதும் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.

நடிகராவதற்கு முன்பு

Tamil Actor Arjun Das

அர்ஜுன் தாஸ் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிறந்தார். அவரது தந்தையின் பெயர் மற்றும் தாயின் பெயர் தெரியவில்லை. அவருக்கு மாளவிகா தாஸ் என்ற சகோதரி உள்ளார். புனேயில் பிறந்த இவர் கலைகளில் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, அர்ஜுன் தாஸ் திரைப்படத் துறையில் தொழில் செய்ய முடிவு செய்தார்.

முக்கிய திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பு அவர் பல குறும்படங்களில் பணியாற்றினார். ரேடியோ ஒன் 94.3FM இல் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றினார். மேலும் அங்குதான் தனது குரலுக்கு ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.அவரது சக்திவாய்ந்த குரல் ஒரு நடிகராகவும் குரல் கலைஞராகவும் அவருக்கு இரட்டை நன்மையை அளித்தது.

Tamil Actor Arjun Das

திரைப் பயணம்

2012 இல், அவர் சுதந்திரத் திரைப்படமான பெருமான் மூலம் அறிமுகமானார். இது வெளிவந்த தமிழ் மொழி திரில்லர் திரைப்படமாகும், இதில் புதுமுகங்களாக‌ அர்ஜுன் தாஸ் மற்றும் ஸ்ருதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர், தயாரிப்பாளர் ஸ்ரீராம் வேதம் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இது அவரது அறிமுகப்படம் என்றாலும் எதிர்பார்த்த அளவுக்கு அர்ஜூன் தாஸை வெளிப்படுத்தவில்லை. ஆனால் ஒரு ஸ்ரோங் டெபிட்டை கொடுத்திருந்தார். இது அவரது தமிழ் சுயாதீன திரைப்படமாகும்.

Tamil Actor Arjun Das

பின் 2015 ஆம் ஆண்டு குறும்படமான ரண்டெம் நம்பர்ஸ் என்ற படத்தில் நடித்து தன்னை வெளிப்படுத்தினார். இது ஒரு இளைஞர்களுக்கான படமாகும். இப்படத்தை எஸ் எஸ் தளபதி மற்றம் பிரசாந்த் மத்தி தயாரித்தனர். இப்படத்தில் அவரது நடிப்பு அசத்தலாக இருந்திருக்கும்.

Tamil Actor Arjun Das

அதன் பின்னர் ஆக்சிஜன் என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான இந்திய தெலுங்கு மொழி ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாகும், இப்படத்தில் கோபிசந்த், ராஷி கண்ணா மற்றும் அனு இம்மானுவேல் ஆகியோர் நடித்துள்ளனர். அவர்களுடன் அர்ஜூன் தாஸ் நடிகரின் தம்பியாக நடித்து நல்லதொரு பெர்போமன்ஸை கொடுத்திருந்தார்.

Tamil Actor Arjun Das

அவரது குரலில்

அந்த படத்திற்கு பிறகு அவர் கும்கி 2 மற்றும் அந்தகாரம் படங்களை எடுத்துக்கொண்டார். இவற்றில் நடித்துக்கொண்டிருக்கும்போதே இவரது குரலை ரசித்த கெளதம் மேனன் தனது துருவ நட்சத்திரம் படத்திற்கு குரல் கொடுக்க அர்ஜூன் தாஸை கேட்டிருப்பார். அதனால் அப்படத்தின் குரலுக்கும் சொந்தகாரன் ஆனார் அர்ஜீன் தாஸ்.

வில்லனாக மிரட்டிய படங்கள்

கெளதம் மேனனை அடுத்து இவரது குரலால் மயங்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 2019 இயக்கிய கைதி திரைப்படத்தில் ஒரு பிரதான வில்லன் கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார். இப்படத்தில் சரியாக செய்வேனா என்ற பதட்டத்தில் இருந்த அர்ஜூன் பிறகு நடிக்க சம்மதித்து எல்லோராலும் பாராட்டப்படக்கூடியவாறு நடித்திருந்தார்.

Tamil Actor Arjun Das
Tamil Actor Arjun Das

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தில் நடித்து வெள்ளித்திரையில் முத்திரை பதித்தார். . 2019 ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. ₹155 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் குரலால் மிரட்டியிருப்பார். அது மட்டுமன்றி அவர் கூறிய “லைப் டைம் செட்டில்மென்ட்” இன்னும் வைரல் தான் இதன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.

கைதிக்கு முன் நடித்த திரைப்படம் அந்தகாரம் 2020ல் வெளியானது. இது வி. விக்னராஜின் அறிமுக‌ இயக்கத்தில் உருவானதாகும். இத்திரைப்படத்தில் பூஜா ராமச்சந்திரன் மற்றும் மிஷா கோஷல் ஆகியோருடன் அர்ஜுன் தாஸ், நடித்திருப்பார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஒரு படி மேலாக நடித்திருந்தார் நடிகர்.

Tamil Actor Arjun Das

அந்தகாரத்தை தொடர்ந்து தளபதியின் படத்தில் நடிக்க ஆசைப்பட்டதை போல் தளபதிக்கு வில்லனாக 2021 மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை இயக்கியது அர்ஜூன் தாஸை உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்ற‌ லோகேஷ் தான். இப்படத்தில் வில்லத்தனத்தை நன்றாக காட்டியிருந்தாலும் கடைசியில் திருந்தி விடுகிறார். உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தைப் பிடித்த முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும். அவரது வில்லத்தனம் எப்போதும் பாரட்டதக்கது. அதிலும் அவரது கணீர் குரல்தான்.

Tamil Actor Arjun Das

அவரது வில்லத்தனங்களை தொடர்ந்து புத்தம் புது காலை விதியாத்தா என்ற ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழித் தொகுப்பிலும் தோண்றியிருந்தார்.இந்தத் தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் 14 ஜனவரி 2022 அன்று பொங்கல் பண்டிகையுடன் இணைந்து ஒளிபரப்பப்பட்டது. காதல், நம்பிக்கை, நெகிழ்ச்சி மற்றும் மனிதநேயம் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொள்கிறது. தீரன் (அர்ஜுன் தாஸ்) என்ற பெயரில் நடித்திருந்தார். இந்தத் தொடரில் அவர் தோன்றியதற்காக விமர்சகர்களும் அவரைப் பாராட்டினர்.

Tamil Actor Arjun Das

விக்ரம் என்பது 2022 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்-மொழி ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாகும். இது லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியது மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்தது. இப்படத்தில் கமல்ஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் அர்ஜுன் தாஸ் ஹேமியோ ரோல்களில் நடித்திருந்தார்.

Tamil Actor Arjun Das

₹420 கோடி (US$53 மில்லியன்)–₹500 கோடி (US$63 மில்லியன்) வசூலித்து 2022 ஆம் ஆண்டின் 2வது அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் ஆனது.

வரவிருக்கும் படங்கள்

அனீதி, புட்ட போம்மா ,அங்கமாலி டைரிஸ் ரீமேக், டாங்கே ,பெயரிடப்படாத படம் 2 போன்ற படங்கள் வரவிலுள்ளது. அங்கமாலி டைரீஸ் என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி குற்ற நாடகத் திரைப்படமாகும். இதை ரீமேக் செய்யப்படுகிறது.தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன ‘அங்கமலை டைரீஸ்’ படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமாகிறார்.

பாடலில்

Tamil Actor Arjun Das

2021ல் “போட்டும் போகட்டுமே” என்ற பாடலில் நடித்திருப்பார். குரல் கொடுத்த படங்கள் (அந்தகாரம் மற்றும் துருவ நட்சத்திரம்).

விருதுகள்

Tamil Actor Arjun Das

2020 கிடைத்த விருதுகள்
கைதி வில்லனாக நடித்ததற்காக‌ ஜீ சினி தமிழ் திரைப்பட விருது, நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் , ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா விருது, மற்றும் விகடன் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, எம்ஜிஆர் – சிவாஜி சினிமா விருது, V4 விருது, எடிசன் விருது, அபிராமி விருது போன்ற விருதுகளை பெற்றார்.

Tamil Actor Arjun Das

2021 விருதுகள்
பிளாக்ஷீப் விருதுகள் அந்தகாரத்தில் ஒரு முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகர்
Behindwoods Gold Icon சிறந்த நடிகர் – சிறப்பு குறிப்பு

அர்ஜுனின் நிகர மதிப்பு சுமார் $3 மில்லியன். மேலும், அவரது வருமான ஆதாரம் ஆங்கரிங், டப்பிங், நடிப்பு மற்றும் மாடலிங் போன்ற பல்வேறு வேலைகள். மேலும், அர்ஜுன் ஒரு படத்திற்கு 40 லட்சம் முதல் 1 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்.

காந்த மற்றும் கணீர் குரலால் ஈர்க்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் மென் மேலும் பல சாதனைகள் புரிந்து வெற்றி நடை போட திரை உலா சார்பாக வாழ்த்துகிறோம்.

Similar Posts