திரைப்பிரபலங்கள் | செய்திகள்

திரை உலாவின் தேடலில் இன்றைய திரைப் பிரபலம் ‍‍‍‍‍– நடிகர் விஜய் (Tamil Actor Vijay)

யூன் 22, 1974 அன்று எஸ். ஏ. சந்திரசேகருக்கும் ஷோபாவுக்கும் சென்னையில் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் விஜய் ஆகும். தளபதி எனும் பட்டத்திற்குரிய விஜயின் வாழ்க்கையை பார்க்கலாம் வாங்க.

Tamil Actor Vijay

நடிகராவதற்கு முன்பு.

இவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தாயார் ஷோபா ஒரு பின்னணிப் பாடகி மற்றும் கர்நாடகப் பாடகி ஆவார்.

Tamil Actor Vijay
Tamil Actor Vijay

விஜய்க்கு வித்யா என்ற பெயருடைய ஒரு தங்கை இருந்தார். அவர் இரண்டாவது வயதில் இறந்து விட்டார். வித்யாவின் இழப்பு விஜய்யை மிகவும் பாதித்தது. விஜயின் தாயாரின் கூற்றுப்படி விஜய் ஒரு குழந்தையாக இருந்தபொழுது மிகவும் பேசக்கூடியவராகவும், குறும்பு செய்பவராகவும் மற்றும் விளையாட்டுத்தனத்துடனும் இருந்தார். வித்யாவின் இழப்பிற்குப் பிறகு அமைதியாகி விட்டார். இவரது தங்கை வித்யாவின் கதை 2005ம் ஆண்டுப் படமான சுக்ரனில் சொல்லப்பட்டிருக்கும். அப்படத்தில் விஜய் ஒரு நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

Tamil Actor Vijay
Tamil Actor Vijay

குழந்தை நட்சத்திரமாக (1984–1988)

பத்து வயதில், வெற்றி (1984) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு, குடும்பம் (1984), வசந்த ராகம் (1986), சட்டம் ஒரு விளையாட்டு (1987) மற்றும் இது எங்கள் நீதி (1988) போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ரஜினிகாந்த் முன்னணி நடிகராக நடித்த நான் சிகப்பு மனிதன் (1985) படத்திலும் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

Tamil Actor Vijay

திரைப்பட வாழ்க்கை (1992)

இவரது தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றிய பிறகு, விஜய் தன் பதினெட்டாம் வயதில் நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார். இப் படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் பல அவமானங்களை எதிர்கொண்டார்.

Tamil Actor Vijay

அதன் பின் விஜய், விஜயகாந்த்துடன் செந்தூரப் பாண்டி (1993) படத்தில் இணைந்து நடித்தார். இப்படம் நல்ல வசூல் செய்தது. ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “தளபதி” என்று அழைக்கிறார்கள். இவருக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, ஐப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நேயர்கள் உள்ளனர். இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன.

Tamil Actor Vijay

நாளைய தீர்ப்பு – அறிமுகம் (1992)

1992ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் எசு. ஏ. சந்திரசேகரின் இயக்கத்திலும் சோபா சந்திரசேகரின் திரைக்கதையிலும் விஜ‌யை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தில் கீர்த்தனா, சிறீவித்யா, இராதா இரவி, சரத்து பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். புதுமுகமான மணிமேகலையின் இசையில் இத்திரைப்படப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

விஜ‌ய் முதன்மைக் கதைமாந்தராக நடித்த முதலாவது திரைப்படம். பல திருமணத்திற்கு புறம்பான உறவுகளைக் கொண்ட ஒரு தொழிலதிபரான அருண் மேத்தா, அவரது மனைவி மகாலட்சுமியைத் துன்புறுத்துவதைச் சுற்றி கதை நகர்கிறது. இருப்பினும், அவள் கர்ப்பமாகி, ஒரு மகன் விஜய்யைப் பெற்றவுடன் விஷயங்கள் எதிர்பாராத திருப்பத்தை எடுக்கின்றன, பின்னர் அவர் தனது தந்தையின் செயல்களுக்கு எதிராக பழிவாங்குவதே இப் படத்தின் கதை ஆகும். பாக்ஸ் ஆபிஸ் வெடிகுண்டாக மாறியது, இருப்பினும் விஜய் சிறந்த புதிய முக நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதை வென்றார்.

Tamil Actor Vijay

தளபதி என்ற அடைமொழி கொடுத்த ரசிகன் (1994)

விஜய்க்கு 1994 இல் வெளியான ரசிகன் படத்தில் இளைய தளபதி என்ற அடைமொழியை அடைந்தார். இந்த அடைமொழி பிற்காலத்தில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் பிரபலமாக விளங்கியது.

விஜய்யும் அனிதாவும் ஒருவரையொருவர் ரகசியமாக காதலிப்பதைச் சுற்றி படம் சுழல்கிறது, ஆனால் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை ஒப்புக்கொள்ள முடியவில்லை. இதை உணர்ந்த அவளது தந்தை இருவரையும் பிரிக்க முயற்சிக்கிறார். இருப்பினும், விதி வேறு திட்டங்களைக் கொண்டுள்ளது. விஜய்க்கு “இளைய தளபதி” (இளைய தளபதி) என்ற முன்னொட்டுடன் வரவு வைக்கப்பட்ட முதல் படம் இதுவாகும். இப்படத்தின் “பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி” பாடலின் மூலம் விஜய்யும் தனது முதல் பாடலைப் பாடினார். இப்படம் திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Tamil Actor Vijay
Tamil Actor Vijay

தல அஜித்துடன் ராஜாவின் பார்வையிலே (1995)

தல,தளபதி என்ற போட்டி இருந்தாலும் இப் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப் படத்திலயே விஜய் மற்றும் அஜித் முதன் முறையாகவும் இறுதியாகவும் இணைந்து நடித்தார்கள்.

கிராமத்தில் ஒரு பணக்காரனின் மகளான கௌரியை சுற்றி சுழலும் படம், ஏழை குடும்பப் பின்னணியில் கல்லூரிக்கு செல்லும் லட்சிய பையனான ராஜாவிடம் விழுகிறது. ராஜா தொடர்ந்து கௌரியைத் தவிர்க்கும்போது, ​​​​அவன் ஏன் அவள் மீது அக்கறை காட்டவில்லை என்று விசாரிக்கத் தொடங்குகிறாள். திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் சராசரிக்கும் குறைவானது.

Tamil Actor Vijay

பூவே உனக்காக தந்த மாற்றம் (1996)

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் உருவான இப் படமே விஜயின் முதல் வெற்றிக்குரிய படமாக விளங்கியது. இவரை ரசிகர்கள் மத்தியில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரமாகவும் ஆக்கியது. ஏற்கனவே விஜய் நடித்த செந்தூரப் பாண்டி (1993) மற்றும் ராஜாவின் பார்வையிலே(1995) திரைப்படம் நல்ல வரவேற்பு ககிடைத்திருந்தலும் அவ் இரு திரைப்படமும் கூட்டணியாக நடித்த திரைப்படம் என்பதால் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

இப் படத்தில் விஜய் ஒரு தலையாக ஒருத்தியை காதலிக்கிறார். ஆனால் அவள் விஜயை ஒரு நண்பனாகதான் பார்க்கிறார். தான் காதலிப்பது அவளுக்கு தெரியாமல் இருக்கும் வேளையில் அவள் இன்னொருவரை காதலித்து திருமணம் செய்கிறாள். அவர்களின் வீட்டார்களுக்கு மதம் விட்டு மதம் திருமணம் செய்வதில் விருப்பமில்லை அவர்களை சமாதானம் செய்வதற்கு விஜய்யிடம் உதவியை கேட்கின்றனர். விஜய்யும் அதற்கு சம்மதித்து அவர்கள் குடும்பம் ஒற்றுமையாக்குவதே இப் படத்தின் கதை ஆகும். இப் படம் வணிகம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு வெற்றி பெற்றது.

Tamil Actor Vijay

சூரியவுடன் நேருக்கு நேர் (1997)

1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வசந்த் இயக்கத்தில் மணிரத்ணம் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா,விஜய்,சிம்ரன், கௌசல்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். விஜய் மற்றும் இணைந்து நடித்த முதல் திரைப்படமாகும்.

இது குடும்பக்கதை கொண்ட திரைப்படமாகும். இப் படத்தில் விஜய் மற்றும் சூரியா குடும்ப உறுப்பினராக காணப்படுகிறார்கள். இப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.

Tamil Actor Vijay

காதலுக்கு மரியாதை (1997)

1997 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஃபாசில் இயக்கத்தில் சங்கிலி முருகன் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஷாலினி, சிவகுமார், ராதிகா, ராதரவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஓ பேபி” எனும் பாடலை பாடகி பவதாரிணியுடன் இணைந்து நடிகர் விஜய் பாடியிருந்தார்.

காதலுக்கு ஜாதி,மதம் ஒன்றும் இல்லை என்பதே இப் படத்தின் முக்கிய கதை ஆகும். இப் படத்தில் விஜய் கல்லூரி படிப்பை நிறைவு செய்யும் நிலையில் இருக்கும் மாணவனாக இருக்கிறார். அக் கல்லூரியில் புதிதாக இணையும் மாணவியிடம் காதலில் விழுகிறார். இருவரும் காதலித்து வருகின்றனர். இருவரின் காதலை பற்றி வீட்டார் இருவரும் வேறு மதம் வேறு ஜாதி என்பதல் அவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். இந் நிலையில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்யலாம் என் முடிவு செய்கின்றனர். அப்போது சில பிரச்சனைகள் வருகின்றன. இறுதியில் இணைகிறார்களா என்பதே இப் படத்தின் கதை ஆகும். இப் படம் காதலர்கள் மத்தியிலும் வணிகரீதியாகவும் வரவேற்பு பெற்றது.

Tamil Actor Vijay

நினைத்தேன் வந்தாய் (1998)

1998-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் நாள் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். விஜய், ரம்பா மற்றும் தேவயானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், மணிவண்ணன், சார்லி உள்ளிட்டோர் துணைப் பாத்திரங்களிலும் நடித்திருந்த இத்திரைப்படத்தை கே. செல்வ பாரதி இயக்கியிருந்தார்.

கோகுல கிருஷ்ணன்(விஜய்) ஒரு இசைக் கலைஞர், தன்னுடைய கனவில் ஒரு பெண்ணைப் பார்க்கிறார்; அப்பெண்ணுடைய முகத்தினைப் பார்க்காமல் காதலிக்கவும் துவங்குகிறார். அப்பெண்ணிற்கு அடையாளம், அவளுடைய இடுப்பில் உள்ள மச்சம். அந்தப் பெண்ணை தன்னுடைய மாமா(மணிவண்ணன்) மற்றும் உறவினர்களின் உதவியுடன் நிஜத்தில் தேடுகிறார். இதற்கிடையில் இவருடைய தந்தை, சந்தனக்கவுண்டர் (வினு சக்ரவர்த்தி) கிராமத்துப் பெண்ணான சாவித்ரியை (தேவையானி) நிச்சயம் செய்கிறார். வேறுவழியின்றி கோகுலும் ஒப்புக்கொள்கிறார், சாவித்ரி கோகுலை விரும்ப ஆரம்பிக்கிறார். இதற்கிடையில் வேறொரு திருமணமொன்றில் தன்னுடைய கனவுதேவதையான சுவப்னாவை (ரம்பா) பார்க்கிறார். சுவப்னாவிற்கு இசை கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் இருக்கிறார் கோகுல். இருவரும் காதல் வயப்படுகின்றனர்.

தன்னுடைய அப்பா செய்த நிச்சயத்தை நிறுத்த முயன்று தோற்றுப்போகிறார் கோகுல், அதை சுவப்னா அறிந்து கொள்கிறார். சுவப்னாவும், சாவித்ரியும் சகோதிரிகள். தன்னுடைய சகோதிரிக்காக சுவப்னா தன்னுடைய காதலைத் தியாகம் செய்கிறார். இதைக் கடைசியில் தெரிந்து கொள்ளும் சாவித்ரி சுவப்னாவையும், கோகுலையும் ஒன்றுசேர்த்து வைக்கிறார்.

Tamil Actor Vijay

ப்ரியமுடன் (1998)

1998 ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை அறிமுக இயக்குநர் வின்சென்ட் செல்வா இயக்கினார். இது நடிகை கௌசல்யாவுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படமாகும்.

இப் படத்தில் விஜய் பணக்காரனின் மனநல குறைவான மகனாக நடிக்கிறார். தனக்கு கிடைக்காதது வேறு எவறுக்கும் கிடைக்ககூடாது என இருக்கும் நபராக இருக்கின்றார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

Tamil Actor Vijay

துள்ளாத மனமும் துள்ளும் (1999)

1999 இல் எழில் இயக்கத்தில், ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில், எஸ். ஏ. இராஜ்குமார் இசையில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இப்படத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் 4கோடி‌ பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு ‌12கோடி(தமிழ்) மற்றும் ‌பிற மாநிலங்கள் ‌நாடுகளில் 6 கோடி‌வசூல் செய்தது. 1999ஆம் ஆண்டில் படையப்பா முதலிடத்திலும், முதல்வன் இரண்டாம் இடத்திலும், துள்ளாத மனமும் துள்ளும் மூன்றாவது இடத்திலும் மிகப்பெரும் ‌வெற்றிப்படமாக காணப்பட்டது. இப் படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இது ஒரு காதல் கதை திரைப்படமாகும். இப் படத்தில் உள்ளூர் கேபிள் வழங்குநரான பணிபுரிகிறார். அதே சமயத்தில் ஊரில் ஒரு பாடகராகவும் விளங்குகிறார். அவரின் அவரின் பாடலுக்கு அடிமையாகி ரசிகையாக மாறுகிறார் சிம்ரன். இப் படத்தில் வரும் பாடல்கள் மக்கள் மத்தியிலும் வணிக ரீதியகவும் பெரும் வரவேற்பு பெற்றது.

Tamil Actor Vijay

விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண‌ வாழ்க்கை

விஜய் பிரிட்டனில் பிறந்த இந்து இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 25 வயதில், 1999 அன்று திருமணம் செய்தார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவம் ஆகிய இரு முறைப்படியும் நடந்தது.

Actor Vijay
Actor Vijay

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2000ல் லண்டனில் பிறந்த ஜேசன் சஞ்சய் என்ற மகன் மற்றும் 2005ல் சென்னையில் பிறந்த திவ்யா சாஷா என்ற மகள். ஜேசன் சஞ்சய் விஜயின் வேட்டைக்காரன் (2009) படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். திவ்யா சாஷா தனது இளமை வயதில் விஜயின் தெறி (2016) திரைப்படத்தில் மகளாக ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Jason Sanjay
Divya Sasha

குஷி (2000)

2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய் நடித்த இப்படத்தை எஸ். ஜே. சூர்யா இயக்கினார். தேவா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். இப் திரைப்படத்தில் ஜோதிகா மற்றும் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜோதிகா தனது நடிப்பிற்காக, தமிழில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும், சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளில் சிறந்த பரபரப்பான நடிகைக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதையும் வென்றார்.

காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதில் விஜய் மற்றும் ஜோதிகா கல்லூரி மாணவர்களாக நடித்திருப்பார்கள். ஒருவர் பிறக்கும் போதே அவருக்கு துணையாக இன்னோறுவர் பிறந்திருப்பார். அவ்வாறு இக் கதையும் கல்லூரியில் எலியும் பூனையும் போல் சண்டை பிடித்துக்கொண்டு இருப்பவர்கள் காதலில் விழுவதே இப் படத்தின் கதை ஆகும். இப் படம் வணிகம் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

Tamil Actor Vijay

பிரியமானவளே (2000)

2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய் நடித்த இப்படத்தை கே. செல்வபாரதி இயக்கினார். இத் திரைப்படத்தில் சிம்ரன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், வையாபுரி மற்றும் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப் படத்தில் ஒரு பணக்காரனின் மகனாக‌ இருக்கும் விஜய் தமிழர்களின் திருமண வாழ்க்கையை புரிந்து கொள்ளவில்லை வெளிநாட்டு முறைப்படித்தான் திருமணம் செய்வேன் என்று திருமண அக்ரிமெண்ட் ஒன்றின் மூலம் திருமணம் செய்கிறார். திருமண அக்ரிமெண்ட் முறை தவறு என்பதை எடுத்துக்காட்டுவதே இப் படத்தின் கதை ஆகும். பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

Tamil Actor Vijay

பிரண்ட்ஸ் (2001)

2001ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திலும் கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும் விஜய், சூர்யா முதன்மை கதைமாந்தர்களாக கொண்டு வெளிவந்துள்ளது. இந்தத் திரைப்படம் ப்ரண்ட்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது. விஜய், சூர்யா மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியோர் நண்பர்களாக நடித்துள்ளனர், தேவயானி, விஜயலட்சுமி, அபிநயஸ்ரீ, ஸ்ரீமன், வடிவேலு, சார்லி மற்றும் ராதா ரவி ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

மூன்று பிரண்ட்ஸின் வாழ்க்கையையும் அவர்களின் ஒற்றுமையையும் எடுத்துக்காட்டுவதே இப் படத்தின் கதை ஆகும். இது நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

Tamil Actor Vijay

ஷாஜகான் (2001)

2001 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ரவியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ரிச்சா பலோட் (அறிமுகம்), விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். மணிசர்மாவின் இசையமைப்புக்கு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார்.

ஒரு மருத்துவரின் காதல் வாழ்க்கை மற்றும் அவரது காதல் வாழ்க்கை எப்படி தெரியாமல் சோகத்தில் முடிகிறது என்பதுதான் கதை. திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இப் பட‌ம் காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

Tamil Actor Vijay

தமிழன் (2002)

2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் ஏ. மசிதின் இயக்கத்திலும் எஸ். ஏ. சந்திரசேகரின் திரைக்கதையிலும் விஜய்யை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.

இது வழக்கறிஞர்களின் வாழ்க்கை பற்றியும் சட்டத்தின் முக்கியதுவத்தையும் வெளிப்படுத்தும் ஒரு படமாகும். இதில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஒரு சராசரி மனிதனுக்கு சட்டத்தின் முக்கியதுவத்தை எடுத்துகாட்டுவதே இப் படத்தின் கதை ஆகும். இப் படம் மக்களிடத்தில் பெரும் வரவேற்பு பெறவில்லை.

Tamil Actor Vijay

பகவதி (2002)

2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் ஏ. வெங்கடேசின் இயக்கத்திலும் பட்டுக்கோட்டை பிரபாகரின் திரைக்கதையிலும் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்தது.

இது அண்ணன்,தம்பி அன்பை வெளிக்காட்டும் திரப்படமாகும். தம்பி காதலிக்கும் காதலியின் அப்பா காதலுக்கு சம்மதிக்கவில்லை. தம்பியின் திருமணம் அன்று தம்பியை கொள்கின்றார் காதலியின் அப்பா. திருமணம் முடித்த தந்து மகளை கொள்வதற்கு துடிக்கும் அப்பாவிடமிருந்து காப்பாற்றுவதே இப் படத்தின் கதை ஆகும். இப் படம் மக்களிடையே குறைவான வரவேற்பை பெற்றிருந்தது.

Tamil Actor Vijay

திருமலை (2003)

2003ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் இரமணாவின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விஜய்யை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது. தெலுங்கில் கௌரி என்ற பெயரில் இத்திரைப்படம் 2004இல் மீண்டும் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்தார்.

இது சாதாரன பைக் மெக்கானிக் கடை வைத்திருப்பவனுக்கும்,வசதியுள்ள பெண்ணிற்கும் உள்ளாகும் காதல் கதை ஆகும். இவர்களின் காதலை பிரிப்பதற்கு காதலியின் தங்தை பல முயற்சிகள் எடுக்கிறார் இறுதியில் காதல் வெற்றி பெறுகின்றது. இப் படத்தில் வரும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது.

Tamil Actor Vijay

கில்லி (2004)

2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2001-ல் வெளியான பிரெண்ட்ஸ் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

இப் படத்தில் மாநிலவு கபடி விளையாட்டு வீரர் ஆவர். கபடி விளையாடுவதற்காக மதுரைக்கு செல்கிறார். அங்கே தனலட்சுமி (திரிஷா) படும் கஷ்டத்தை பார்த்து அவரை காப்பாற்றி வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்க உதவி செய்கிறார். அதே நேரத்தில் அவளை காதல் செய்கிறார். பின் கபடி மைதானத்தில் வில்லனை வீழ்த்தி தனலட்சுமியை கரம் பிடிப்பதே இப் படத்தின் கதை ஆகும். இப் படம் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.இப் படம் பாக்ஸ் ஆபிஸில் ₹50 கோடி வசூல் செய்த முதல் தமிழ்த் திரைப்படமாகும்.

Tamil Actor Vijay

திருப்பாச்சி (2005)

2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பேரரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2004-ல் வெளியான கில்லி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. அன்னாவரம் என்ற பெயரில் தெலுங்கில் மீளுருவாக்கப்பட்டது.

இது அண்ணன் தங்கை பாசமலர் படமாகும். தனது நண்பனின் இறப்புக்கு காரணமான பிரபல் ரவுடியையும் மற்றும் சில தாதாக்களையும் தனி ஒருவனாக கொள்ளுவதே இப் படத்தின் கதை ஆகும். இப் படம் மக்களிடையே பெரும் வர்வேற்பை பெற்றது. இப் படம் பாக்ஸ் ஆபிஸில் ₹32 கோடி வரை வசூலித்துள்ளது.

Tamil Actor Vijay

சச்சின் (2005)

2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆவார். இது 2009 இல் வெளியான கமாண்டி இந்தி திரைப்படத்தின் மறுஆக்கம் ஆகும்.

இது ஒரு காதல் திரைப்படமாகும். இக் கதையில் கல்லூரி மாணவனாக விஜய் நடிக்கிறார். கல்லூரியில் இருக்கும் ஒரு அழகான பெண்ணை காதலுக்கு சம்மதிக்க வைப்பதே இப் படத்தின் கதை ஆகும்.

Tamil Actor Vijay

சிவகாசி (2005)

2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பேரரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய்,அசின்,பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும் திரையரங்குகளில் 150 நாட்கள் ஓடியது மற்றும் வணிக ரீதியாக நன்றாக ஓடியது.

சிறுவயதில் அண்ணன் செய்த தவறுக்காக வீட்டை விட்டு வெளியில் வருகிறார். பின் காதலியின் விருப்பத்திற்காக மறுபடியும் தனது வீட்டிற்கு செல்லும் போது தனது அம்மாவும் தங்கச்சியும் படும் கஷ்டத்தை பார்க்கும் விஜய் தனது அண்ணனின் ஆணவத்தை அடக்குவதே இப் படத்தின் கதை ஆகும்.

Tamil Actor Vijay

ஆதி (2006)

2006 வெளிவந்த இத் திரைப்படத்தை ரமணா இயக்கத்தில் எஸ். ஏ. சந்திரசேகர் சோபா சந்திரசேகர் தயாரிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்க விவேக், பிரகாஷ்ராஜ் சாய் குமார் ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்பட தெழுங்கு வெற்றிப் படமான அதனொகடே (Athanokkade) திரைப்படத்தை ஒட்டி தயாரிக்கப்பட்டதாகும்.

தன் குடும்பத்தை கொடூரமாக கொன்ற வில்லனை கல்லூரி மாணவனாக இருந்து கொண்டு பழிவாங்குவதே இப் படத்தின் கதை ஆகும். இப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.

Tamil Actor Vijay

போக்கிரி (2007)

2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இத் திரைப்படத்தினைப் பிரபுதேவா இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரமாக விஜய், அசின் , பிரகாஷ் ராஜ், நெப்போலியன், நாசர், வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜ‌னவரி 14 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது. இப்படம் 2005-ல் வெளியான திருப்பாச்சி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. மேலும் இந்தபடம் இவரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கதாநாயகன் தனது திறமையை வெளிப்படுத்தியது போல வடிவேலு தனது நகைச்சுவை நடிப்பு திறமையை வெளிப்படுத்தியது மேலும் இப்படத்திற்கு சிறப்பாக அமைந்தது.

விஜய் காவல்துறையாளராக நடிக்கும் முதலாவது திரைப்படமாகும். ஆரம்பத்தில் இரக‌சிய பொலிஸாக இருக்கும் விஜய் பிரபல ரவுடி கூட்டத்துடன் இணைகிறார். அந்த கூட்டத்தின் தலைமறைவில் இருக்கும் தலைவரை வெளியில் கொண்டுவந்து கைது செய்வதே இப் படத்தின் கதை ஆகும். இப் படம் பாக்ஸ் ஆபிஸில் ₹55 கோடி வரை வசூலித்துள்ளது.

Tamil Actor Vijay

அழகிய தமிழ்மகன் (2007)

2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் பரதனின் இயக்கத்திலும் எஸ். கே. ஜீவாவின் திரைக்கதையிலும் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் முதன்முறையாக இரட்டை வேடங்களின் நடிக்கிறார். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் மகா முதுரு என்ற பெயரிலும் இந்தி மொழியில் சப்சே படா கில்லாடி என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது.

முதன் முறையாக இரு வேடங்களில் நடிக்கும் விஜய் சமீபத்தில் நடக்கவிருப்பதை முன்னரே கனவில் கானும் கல்லூரி மாணவனாகவும் காசுக்காக எதையும் செய்யும் நபராகவும் நடித்துள்ளார். இப் படம் பாக்ஸ் ஆபிஸில் ₹8 கோடி வரை வசூலித்துள்ளது.

Tamil Actor Vijay

குருவி (2008)

2008ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் தரணியின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் திரிசா, சுமன், விவேக், ஆஷிஷ் வித்யார்த்தி, மணிவண்ணன், மாளவிகா ஆகியோரும் நடித்திருந்தனர்.

இது ஒரு தந்தை மகன் சென்டிமன்ட் படமாகும். தந்தைக்கு கிடைக்கவேண்டிய பணத்தை திருப்பி கேட்ட போன இடத்தில் தனது தந்தைக்கு நடந்த கொடுமைகளை கேள்விபட்டு தந்தையை மீட்பதே இப் படத்தின் கதை ஆகும். பிஹைண்ட்வுட்ஸ் இத் திரைப்படத்திற்கு 5 நட்சத்திரங்களுக்கு 2.5 என்று மதிப்பிட்டு வழங்கியது. மக்களிடையே இப் படம் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. இப் படத்தில் வரும் பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது.

Tamil Actor Vijay

வில்லு (2009)

2009இல் வெளிவந்த இப் படத்தை பிரபு தேவாவால் இயக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் இசை தேவி ஸ்ரீ பிரசாத்தால் அமைக்கப்பட்டுள்ளது. விஜய், நயன்தாரா, வடிவேலு, பிரகாஷ் ராஜ் ஆகிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப் படத்தில் இராணுவ அதிகாரியின் மகனாக நடித்துள்ளார். தனது தந்தைக்கு இருக்கும் தேசத்துரோகி எனும் பட்டத்தை கொடுத்தவர்களை பழிவாங்குவதே இப் படத்தின் கதை ஆகும். இப் படம் எதிபார்த்த அளவில் வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது.

Tamil Actor Vijay

வேட்டைக்காரன் (2009)

2009இல் சன் பிக்சரின் தயாரிப்பில் பாபுசிவன் இயக்கத்தில் “விஜய்” ,அனுஷ்கா, மற்றும் பலர் நடிப்பில் உருவாகியது. இப் படத்திற்கு விஜய் ஆன்டனி இசை அமைத்துள்ளார். இப்படம் 2007-ல் வெளியான போக்கிரி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

ஒரு சிறந்த நேர்மையான காவல் துறை அதிகாரியாக கடமையாற்ற விரும்பும் நபராக இப் படத்தில் நடித்துள்ளார். இப் படம் பாக்ஸ் ஆபிஸில் ₹42 கோடி வரை வசூலித்துள்ளது.

Tamil Actor Vijay

சுறா (2010)

2010ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் எசு. பி. இராஜ்குமாரின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விஜ‌யை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது. சுறா விஜ‌யின் 50ஆவது திரைப்படமாகும். சங்கிலி முருகனால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் சன் படங்களால் வழங்கப்பட்டு, பார்வையாளர்களிடத்திலிருந்து எதிர்மறையான திறனாய்வுகளைப் பெற்றுக் கொண்டது.

இத்திரைப்படம் இணையத் திரைப்படத் தரவுத்தளத்தின் பயனர் கருத்துக்கணிப்பின் படி கடைசி நூறு இடங்களுள் 36ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது. இந்தத் திரைப்படம் சோட்டா மும்பை என்ற மலையாளப் படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது. இப்படம் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் 80 முதல் 100 சதவிகிதம் வரை நஷ்டத்தை உருவாக்கி மாபெரும் பிரம்மாண்ட தோல்வியை சந்தித்தது

இப் படத்தில் மீனவனாக நடித்துள்ளார். இது மீனவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஒரு படமாகும். இந்த திரைப்படம் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் $897,597 வசூலித்தது ஆனால் உள்நாட்டில் குறைவான வசூலை பெற்றது.

Tamil Actor Vijay

நண்பன் (2012)

2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் த்ரீ இடியட்ஸ் (2009) என்ற ஹிந்தி படத்தின் மீளுருவாக்கம் ஆகும். இத்திரைப்படத்தின் மூலம் விஜயின் திரைப்படத்திற்கு முதன் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். இது தெலுங்கு மொழியில் ஸ்நேகிதுடு என மொழிமாற்றம் செய்யப்பட்டு 26 ஜனவரி 2012 அன்று ஆந்திராவில் வெளியிடப்பட்டது.

இது கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட படமாகும். கல்லூரி மாணவனாக நடிக்கும் விஜய் தனது நண்பர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர்களை அவர் அவர்க்கு பிடித்தமான வாழ்க்கையை அமைத்து கொடுப்பதே இப் படத்தின் கதை ஆகும். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் முழு ஓட்டத்தில் ₹150 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ள‌து.

Tamil Actor Vijay

துப்பாக்கி (2012)

2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் அவரது உதவி இயக்குனரின் கதையை இயக்கினார். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார்.

மும்பையில் வெடிகுண்டு வைக்க திட்டமிடும் தீவிரவாதிகளை விடுமுறையில் வந்திருக்கும் இராணுவவீரன் தனது இராணுவ நண்பர்களுடன் தீவிரவாதிகளை தடுப்பதே இப் படத்தின் கதை ஆகும். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் முழு ஓட்டத்தில் ₹125 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற இப் படம் பாகம் 2 க்கு காத்திருக்கின்ற‌னர்.

Tamil Actor Vijay

தலைவா (2013)

2013 இல் வெளிவந்த திரைப்படம் ஆகும். ஏ. எல். விஜய் இயக்கத்தில், சந்திர பிரகாஷ் ஜெயின் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் நடித்துள்ளார். அவருக்கு இணையாக அமலா பாலும் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்தியராஜும், மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையும் சந்தானமும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசை ஜி. வி. பிரகாஷ் குமார் அமைத்து இருக்கிறார்.

மும்பாயில் தமிழர்களின் தலைவனும், மக்களுக்கு நல்லது செய்யும் தாதாவுமாக இருப்பவர் “அண்ணா”.பொலீசும், அண்ணாவின் எதிரிகளும் அவரைப் பிடிக்க முயன்றும் முடியாத நிலையில், வளர்ந்து இளைஞனாக இருந்த விஸ்வாவைத் தந்திரமாக இந்தியாவுக்கு அழைத்துவந்து அவனைப் பயன்படுத்தி “அண்ணா”வைப் பிடித்துக் கொன்றுவிடுகிறார்கள். பின்னர், தந்தையின் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ளும் விஸ்வா எதிரிகளை அழிப்பதுடன், தந்தையின் பாதையிலேயே செல்வதுதான் கதை. ₹65 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப் படம் ₹45 கோடி வசூலை வென்றெடுத்து தோல்வியை சந்தித்து.

Tamil Actor Vijay

ஜில்லா (2014)

2014ல் திரைக்கு வந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் சூரி ஆகியோர் நடித்து வெளிவந்த இப்படத்திற்கு, டி. இமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை எழுதி இயக்கியவர் இரா.தி நேசன் ஆவார். இப்படம் 2014 ஜ‌னவரி 10 ஆம் திகதி தைப்பொங்கல் வெளியீடாக வெளிவந்தது.

மதுரையின் பெரிய தாதாவின் மகனாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் காவல் துறையை பிடிக்காத இவரை காவல் துறை அதிகாரியாக மாற்றுகிறார் சிவா (மோகன்லால்). பின் தந்தை செய்யும் தவறை தட்டி கேட்பதே இப் படத்தின் கதை ஆகும். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் முழு ஓட்டத்தில் ₹85 கோடியை ஈட்டியது.

Tamil Actor Vijay

கத்தி (2014)

இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் கதை, இயக்கத்தில் உருவாகி 2014 ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் நாயகராக விஜய்யும் நாயகியாக சமந்தாவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு, 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 3ம் நாள் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. இப்படத்தில் விஜய், இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். விஜய் ஏற்கனவே அழகிய தமிழ்மகன் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்தார்.

இத் திரைப்படம் கொப்ரெட் கம்பனிகளை எதிர்த்து விவசாயத்தை அடிப்படையாக வைத்து அமைந்துள்ளது. இப் படத்தில் ஜெயில் கைதியாகவும் ஒரு விவசாயியின் மகனாகவும் இரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ₹60 கோடி வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.

Tamil Actor Vijay

தெறி (2016)

2016 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடித்துள்ளனர். அட்லீ இயக்கிய இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்தார். இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார். இப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இத் திரைப்படத்தில் நடிகை சமந்தா தனது சொந்தக்குரலிலேயே வசனம் பேசியுள்ளார்.

ஒரு நாட்டின் பெண்களின் பாதுகாப்பை எடுத்து காட்டுவதே இப் படத்தின் கதை ஆகும். பொலிஸ் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இத்திரைப்படம் ₹75 கோடி (US$9.4 மில்லியன்) பட்ஜெட்டில் ₹150 கோடி (US$19 மில்லியன்) வசூலித்தது மாபெரும் வேற்றி கண்டது மற்றும் 2016 ஆம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த தமிழ் மற்றும் தென்னிந்திய படமாக உருவெடுத்தது. மேலும் இது மூன்று SIIMA விருதுகள், மூன்று IIFA விருதுகளை வென்றது.

Tamil Actor Vijay

மெர்சல் (2017)

2017 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜய், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். பாக்ஸ்ஆபிஸில் 200 கோடி வசூல் செய்த படம் என விளம்பரம் செய்யப்பட்டது. இப் படத்தில் மூன்று வேடத்தில் விஜய் நடித்துள்ளார்.

மருத்துவமனையில் நடக்கும் மோசடிகளை ஒரு மருத்துவனாகவும் ஒரு மெஜிசியன் ஆகவும் இரு வேடத்தில் தடித்து நிருத்துகிறார். ஒரு நாட்டிற்கு முக்கியமான மருத்துவமுறையினை தவறாக செயற்படுத்துபவர்களை தடுப்பதே இப் படத்தின் கதை ஆகும்.பாக்ஸ்ஆபிஸில் 200 கோடி வசூல் செய்த படம் என விளம்பரம் செய்யப்பட்டது

Tamil Actor Vijay

சர்கார் (2018)

2018 ஆம் ஆண்டு வெளியான அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை எழுதி, இயக்கியவர் ஏ. ஆர். முருகதாஸ் ஆவார். விஜய், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது அரசியல் தொட‌ர்பான திரைப்படமாகும்.

வெளிநாட்டில் வேலை செய்யும் பிசினஷ் மென் தனது தாய் நாட்டில் நடக்கும் தேர்தலுக்காக இந்தியாவுக்கு வருகிறார். அவர் வந்த போது தான் தெரிகிறது இங்கு அரசியல் நடவடிக்கைகள் ஒழுங்கு முறையில் இல்லை என்பது. நாட்டில் அரசியல் நடவடிக்கைகளை மாற்றுவதே இப் படத்தின் கதை ஆகும். இத் திரைப்படம் ₹110 கோடி வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Tamil Actor Vijay

பிகில் (2019)

2019 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படமானது கால் பந்து விளையாட்டினை அடிப்படையாகக் கொண்டும் எடுக்கப்பட்டுள்ளது. இதனை அட்லீ இயக்கியுள்ளார். கல்பாத்தி எஸ். அகோரம் மற்றும் ஏ. ஜி. எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஜய் இரட்டை வேடம் நடித்துள்ளார். நயன்தாரா மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ராயப்பனை கொலை செய்த பிறகு மகனான மைக்கேல் அப்பனின் இடத்திற்கு வருகின்றான். அப்பாவின் மர‌ண‌த்தால் தனது வாழ் நாள் கனவான கால் பந்து விளையாட்டினை கைவிடுகின்றான். தான் கைவிட்டதை மறுபடியும் மீட்டெடுப்பதே இப் படத்தின் கதை ஆகும். இப் படம் ₹120 கோடி வித்தியாசத்தில் வெற்றியை கண்டுள்ளது.

Tamil Actor Vijay

மாஸ்டர் (2021)

2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆகும். லோகேஷ் கனகராஜ் என்பவர் எழுதி மற்றும் இயக்க சேவியர் பிரிட்டோ, சுனே ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கான ஒளிப்பதிவு சத்யன் சூரியன் மற்றும் படத்தொகுப்பு பிலோமின் ராஜ். விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்த‌ இத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

குடி போதையில் இருக்கும் வாத்தி ஒருவர் சிறைத்தண்டனை அனுபவிக்கும் மாணவர்களை காப்பாற்றுவதே இப் படத்தின் கதை ஆகும். இப் படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தைப் பிடித்த முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும். படம் சுமார் ₹230–300 கோடிகளை வசூலித்தது.

Tamil Actor Vijay

பீஸ்ட் (2022)

இயக்குனர் நெல்சன் எழுதி இயக்கிய 2022 அதிரடித் திரைப்படம். இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். பயங்கரவாதிகளால் ஷாப்பிங் மாலில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான முன்னாள் RAW ஏஜென்ட்டின் தேடலைச் சுற்றி இது சுழல்கிறது.


முன்னணி நடிகராக விஜய்யின் 65வது படத்தின் தயாரிப்பு உரிமையை சன் பிக்சர்ஸ் 2020 ஜனவரி தொடக்கத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கவிருந்தபோது வாங்கியது. இருப்பினும், முருகதாஸ் தனது சம்பளத்தை குறைக்க மறுத்ததால், தயாரிப்பாளர்கள் முருகதாஸை அக்டோபர் 2020 இல் படத்திலிருந்து வெளியேற்றினர். நெல்சன் பின்னர் பணியமர்த்தப்பட்டார், மேலும் அவர் படத்திற்கு ஒரு புதிய ஸ்கிரிப்டை எழுதினார். இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா, படத்தொகுப்பை ஆர். நிர்மல், தயாரிப்பு வடிவமைப்பை டி.ஆர்.கே.கிரண் மேற்பார்வையிட்டனர்.

இதில் நடிகர்களின் நடிப்பு, அதிரடி காட்சிகள், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் இசையமைப்பிற்கான பாராட்டுகளுடன் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் அதன் வேகம், எழுத்து, சிறிய கிளுகிஷ்கள், டார்க் ஹ்யூமர் ஆகியவற்றை நோக்கி விமர்சனங்கள் செலுத்தப்பட்டன. மற்றும் திசை. இருப்பினும், இப்படம் சுமார் ₹236.90–250.05 கோடிகளை வசூலித்து 2022 ஆம் ஆண்டின் மூன்றாவது அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாகவும், உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகவும் மாறியது.

Tamil Actor Vijay

வாரிசு (2023)

2023 இல் வெளிவரவிருக்கும் இப் படத்தை தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி பைடிபைலி எழுதி இயக்கும் திரைப்படமாகும். இப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 2023 ஜனவரியில் தைப்பொங்கல் திருநாளில் படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Tamil Actor Vijay

ஊடகங்களின் வரவேற்பு

இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் செலிபிரிட்டி 100 பட்டியலின் இந்திய பதிப்பில் பல முறை விஜய் இடம்பெற்றுள்ளார். 2012ல் #28, 2013ல் #49, 2014ல் #41, 2016ல் #61 மற்றும் 2017ல் #31 ஆகிய இடங்களைப் பெற்றுள்ளார்.

விளம்பர ஒப்புதல்கள் மற்றும் அறப்பணிகள்

விளம்பரங்கள்

2002ல், விஜய் கொகோ கோலா விளம்பரங்களிலும், 2010ல் தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கான விளம்பரத் தூதராக ஜோஸ் ஆலுக்காஸ் விஜயை ஒப்பந்தம் செய்தது. மற்றும் டாடா டொகோமோ விளம்பரத்திலும் விஜய் தோன்றியுள்ளார்.

Tamil Actor Vijay
Tamil Actor Vijay

அறப்பணிகள்

விஜய் ஒரு சமூக நல அமைப்பான விஜய் மக்கள் இயக்கத்தைத் தொடங்கினார். இது ஜூலை 26, 2009 அன்று புதுக்கோட்டையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இவரது பெரும்பான்மையான அறப்பணிகளுக்கு இவ்வியக்கம்தான் பொறுப்பாக உள்ளது. தானே புயலுக்குப் பிறகு, கடலூரில் உள்ள கம்மியம்பேட்டையில் ஒரு நிவாரண முகாமுக்கு இவரது மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த முகாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் அரிசி வழங்கினார். அந்நேரத்தில் கடலூர் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. முகாம் அமைக்கப்பட்ட பகுதி, தங்களது விருப்பத்திற்குரிய நட்சத்திரத்தை ஒரு தடவை பார்ப்பதற்காக கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் காரணமாக சீக்கிரமே ஒரு பண்டிகை தோற்றத்திற்கு மாறியது.

Tamil Actor Vijay

மே 2008ல், பள்ளியிலிருந்து படிப்பைப் பாதியிலேயே விட்டு வெளியேறும் குழந்தைகளை தடுக்கும் முயற்சியில் விஜய் ஹீரோவா? ஜீரோவா? என்ற ஒரு சிறிய பொது சேவை வீடியோவில் தோன்றினார். 2012ம் ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்களுக்காக விஜய் கல்வி விருதுகள் 2012 ஆனது ஜூலை 8 ஆம் தேதி, 2012 அன்று விஜய் மக்கள் இயக்கத்தால் சென்னை ஜே. எஸ். கல்யாண மண்டபத்தில் நடத்தப்பட்டது.

விருதுகளை விஜயே நேரில் வழங்கினார். தன் பிறந்த நாளில், 22 யூன் 2007ல் விஜய் எழும்பூர் அரசு பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார். நவம்பர் 2014ல், 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற ஒரு தேநீர் கடை உரிமையாளரின் மகளான ஃபாத்திமாவுக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இடம் கிடைக்க விஜய் உதவினார்.

Tamil Actor Vijay

செப்டம்பர் 2017ல், ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்களால் விஜய் மக்கள் இயக்க அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஆண்ட்ராய்ட் செயலி உலகெங்கிலும் உள்ள விஜய் ரசிகர்களை ஒன்றிணைக்கத் தொடங்கப்பட்டது. 26 டிசம்பர் 2017ல், பொள்ளாச்சியில் உள்ள விஜய் ரசிகர்கள்,

நோயாளிகளுக்கும் காயமடைந்தவர்களுக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆட்டோ போன்ற இலவச தேவைகளை வழங்கி உதவியளித்தனர். 11 செப்டம்பர் 2017ல், நீட் தேர்வில் மருத்துவ சீட் பெறாமல் தோல்வியடைந்து, தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு விஜய் நிதி உதவி வழங்கினார். 7 யூன் 2018ல், ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விஜய் நிதி உதவி வழங்கினார்.

22 ஆகஸ்ட் 2018ல், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தன் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் உதவியுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹70 லட்சம் மதிப்புள்ள பொருட்களை விஜய் அனுப்பி வைத்தார். நவம்பர் 2018ல் விஜய் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்க தன் ஒவ்வொரு விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைமை நிர்வாகிகளின் வங்கிக் கணக்குகளில் ₹4.5 இலட்சம் செலுத்தினார்.

Tamil Actor Vijay

சமூக நல நடவடிக்கைகள் மூலம் ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்காக சேவை செய்தது மற்றும் திரைத்துறையில் தான் செய்த சாதனைகள் ஆகியவற்றின் காரணமாக 2007ல் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்) இருந்து விஜய் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.

அரசியல் நடவடிக்கை.

2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. 2017 ஆண்டு மெர்சல் படத்தின் மூலம் பிழையான GST வரி விபரங்களை கூறியதாக, அரசியல் வட்டாரங்களில் மிகவும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.

Tamil Actor Vijay

பாடிய பாடல்கள்

1994 கோத்தகிரி குப்பம்மா(தேவா), அய்யய்யா அலமேலு ஆவின் பசும்பாலு(தேவா), தொட்டபெட்டா(விஷ்ணு)
1995 பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி(கோயம்புத்தூர் மாப்ளே)
1996 திருப்பதி போனா மொட்ட(மாண்புமிகு மாணவன்) , அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி(காலமெல்லாம் காத்திருப்பேன்), சிக்கன் கரே(செல்வா)
1997 ஊர்மிளா ஊர்மிளா(ஒன்ஸ் மோர்), ஓஹ பேபி பேபி மற்றும் என்னை தாலாட்ட வருவாளா(காதலுக்கு மரியாதை)
1998 மௌரிய மௌரிய(ப்ரியமுடன்), நிலவே.. நிலவே(நிலாவே வா), சந்திர மண்டலத்தை(நிலாவே வா), காலத்துக்கு ஒரு கனா( வேலை), தம்மடிக்கிற ஸ்டைல பாத்து(பெரியண்ணா), ரோட்டுல ஒரு(பெரியண்ணா), டிக் டிக் டிக்(துள்ளி திரிந்த காலம்)
1999 தங்கநிறத்துக்கு(நெஞ்சினிலே)
2000 மிசிச்சிப்பி நதி குலுங்க(பிரியமானவளே), சின்னஞ்சிறு(கண்ணுக்குள் நிலவு), இரவு பகலை(கண்ணுக்குள் நிலவு)
2001 என்னோட லைலா(பத்ரி)
2002 கொக்கா கோலா(பகவதி), உள்ளத்தைக் கிள்ளாதே(தமிழன்)
2005 வாடி வாடி(சச்சின்)
2012 கூகுள் கூகுள்(துப்பாக்கி)
2013 வாங்கண்ணா வணக்கங்கண்ணா(தலைவா)
2014 கண்டாங்கி கண்டாங்கி(ஜில்லா), லெட்ஸ் டெக் ய செல்ஃபி புல்ல(கத்தி)
2015 ஏன்டி ஏன்டி(புலி)
2016 செல்ல குட்டி(தெறி)
2019 நெஞ்சுக்குள்ளே குடியிருக்கும்(பிகில்)

2021 குட்டி ஸ்டோரி பாடல்(மாஸ்டர்)

2022 “ஜாலி ஓ ஜிம்கானா” (பீஸ்ட்)

2023 “ரஞ்சிதமே ரஞ்சிதமே” (வாரிசு)

Tamil Actor Vijay

விருதுகள்

1998 – சிறந்த நடிகர் விருது – (காதலுக்கு மரியாதை )
2005 – சிறந்த நடிகர் விருது – (திருப்பாச்சி)
2004 – சென்னை கார்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது – (கில்லி)
2004 – தினகரன் சிறந்த நடிகர் விருது – (கில்லி )
2004 – பிலிம் டுடே சிறந்த நடிகர் விருது – (கில்லி)
2005 – பொதுச்சேவை அறிவிப்பு -க்கு வெள்ளி விருது
2007 – தமிழின் சிறந்த நடிகருக்கான அம்ரிதா மாத்ருபூமி விருது – (போக்கிரி)
2007 – சிறந்த நடிகருக்கான இசை அருவி தமிழ் இசை விருது – (போக்கிரி)
2009 – சிறந்த நடிகருக்கான இசைஅருவி தமிழ் இசை விருது – (வேட்டைக்காரன்)
2012 – விகடன் சிறந்த நடிகர் விருது – (துப்பாக்கி, நண்பன்)
2009 – சிறந்த நடிகர் விருது(வேட்டக்காரன்)
2013 – சிறந்த பாடகர் விருது(வாங்கன்னா வண்ணக்கங்கன்னா)
2013 – சிறந்த நடிகர் விருது(தலைவா)
2017 – சிறந்த நடிகர் விருது(மெர்சல்)
2017 – சிறந்த நடிகர் விருது(மெர்சல்)
2020 – விருப்பமான நாயகன்(பிகில்)
2018 – தமிழ் நாடு சிறந்த நடிகருக்கான விருது(ஸ்பெஷல் விருது)

Tamil Actor Vijay

விஜய் தொலைக்காட்சியால் வழங்கப்பட்டன விருதுகள்.

2006 – நாளைய சூப்பர் ஸ்டார் – (திருப்பாச்சி, சிவகாசி)
2007 – இந்த ஆண்டின் கேளிக்கையாளர் – (போக்கிரி, அழகிய தமிழ் மகன்)
2009 – விருப்பமான நாயகன் – (வேட்டைக்காரன்)
2012 – இந்த ஆண்டின் கேளிக்கையாளர் – (நண்பன்,துப்பாக்கி)
2012 – விருப்பமான நாயகன் – (துப்பாக்கி)
2014 -சிறந்த நடிகர் விருது – (ஜில்லா,கத்தி)

Tamil Actor Vijay

திரையுலகிற்கு அறிமுகமாகி 30 வருடங்கள் ஆன நிலையில் நடிகர் விஜய் தமிழ்த் திரை உலகில் மென் மேலும் பல சாதனைகள் புரிந்து வெற்றி நடை போட திரை உலா சார்பாக வாழ்த்துகிறோம்.

Similar Posts