திரை உலாவின் தேடலில் இன்றைய திரைப் பிரபலம் –நடிகை பிரியங்கா அருள் மோகன் (Tamil actress Priyanka Arul Mohan )

நடிகையாவதற்கு முன்பு
நவம்பர் 20 1994 ஒரு கன்னட தாய் மற்றும் ஒரு தமிழ் தந்தைக்கு பிறந்தவர். பிரியங்கா இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் கன்னடக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தையின் பெயர் அருள் மோகன், தொழிலதிபர். இல்லத்தரசியான இவரது தாயார் பெயர் கிருஷ்ண மோகன். பிரியங்கா பெற்றோருக்கு ஒரே பிள்ளை
அவர் தனது ஆரம்பக் கல்வியை சென்னை சிஷ்யா பள்ளியில் முடித்தார். பின்னர் PES இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (PESIT) பயோடெக்னாலஜியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார்.இளங்கலைப் படிப்பை முடித்த பிறகு, நடிப்பு மற்றும் மாடலிங்கில் தனது வாழ்க்கையைத் தொடர முடிவு செய்தார், ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு ஆழ்ந்த ஆர்வம் இருந்தது.

திரைப் பயணம்
பிரியங்கா 2019 இல் கன்னட திரைப்படமான ஒன்ட் கதே ஹெல்லாவில் அறிமுகமானார்.(Ondh Kathe Hella) அதனை தொடர்ந்து தெலுங்கு படங்களில் தனது திரை பயணத்தை தொடர்கிறார் அந்த வகையில் பிரியங்கா அருள் மோகன் 2019 விக்ரம் குமார் இயக்கத்தில் நானியுடன் இணைந்து கேங் லீடர் படத்தில் நடித்திருந்தார் இது விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது.

2021 ஆம் ஆண்டு கிஷோர் இயக்கத்தில் சர்வானந்துடன் இணைந்து ஸ்ரீகாரம் தெலுங்கு மொழி படத்தில் நடித்திருந்தார் . திரையரங்குகளில் வெளியிடப்பட்டது மற்றும் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. மேலும் அவர் ஜே இயக்கிய தி மாயன் திரைப்படத்தின் ஒரு பகுதியாகவும் நடித்தார்

பிரியங்கா அருள் மோகனின் திரை பயணம் தமிழில்

அதே ஆண்டு தனது திரை பயணத்தை தமிழில் நெல்சன் எழுதி இயக்கி 2021 வெளியாகிய டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார்.
மற்ற மொழிகளில் பிரியங்கா அருள் மோகன் நடித்த படங்களுக்கு கலவையான விமர்சனங்களேய கிடைத்தது ஆனால் தமிழில் அவர் நடித்த டாக்டர் படம் அவருக்கு பெரிய வரவேட்பை பெற்று தந்தது மட்டும் இல்லாமல் இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ₹100 கோடிகளை வசூலித்தது.

அவரது இரண்டாவது தமிழ் திரைப்படமான எதற்கும் துணிந்தவன் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். படத்தில் முக்கிய பெண் வேடத்தில் நடித்தார். இப்படம் ₹75 கோடிக்கு மேல் வசூலித்து.

2022 மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைத்து கதாநாயகியாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நகைச்சுவை செண்டிமெண்ட் கலந்து வெளிவந்த டான் படத்தில் நடித்திருந்தார் இதுவும் ஒரு பாக்ஸ் ஆபிஸ் வெற்றி படமாகும்.
விருதுகள்
JFW திரைப்பட விருதுகள் 2022 (JFW Movie Awards 2022) சிறந்த அறிமுக நடிகை – பிரியங்கா மோகன் – டாக்டர்
பிஹைண்ட்வுட்ஸ் தங்கப் பதக்கங்கள் 2022(BEHINDWOODS GOLD MEDALS 2022) சிறந்த நடிகை – விமர்சகர்கள் தேர்வு’ என கௌரவிக்கப்பட்டார்.
கலாட்டா விருதுகள் சிறந்த அறிமுக நடிகை – பிரியங்கா மோகன் – டாக்டர்
தொடர் வெற்றி படங்களிலும் புகழ்பெற்ற ஹீரோக்களுடனும் நடித்து வரும் பிரியங்கா அருள் மோகன் மென் மேலும் சாதனை படைக்க திரைஉலா சார்பாக வாழ்த்துக்கள்