செய்திகள்

உங்கள் அனைவருக்கும் நன்றி. யுவன் ஷங்கர் ராஜா ட்வீட் செய்துள்ளார் | Thanks to all of you. Yuvan Shankar Raja tweeted

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இளையராஜாவின் மகனான இவரது இசைக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். யுவனின் இசையுடைய பலமே மிகவும் எளிமையாக அனைவரிடமும் கனெக்ட் ஆவதுதான் என அவரது ரசிகர்கள் எப்போதும் கூறுவதுண்டு.

Thanks to all of you. Yuvan Shankar Raja tweeted

அரவிந்தனில் அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா திரையுலகில் அரவிந்தன் படம் மூலம் அறிமுகமானார். இதில் சரத்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் 1997ஆம் ஆண்டு வெளியானது. அரவிந்தன் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும்போது அவருக்கு வயது 15லிருந்து 17க்குள்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்தில் அவரது இசை பெரிதாக ஒன்றும் கவனிக்கப்படவில்லை.

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்த படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இயக்குநர் வசந்த்தின் படங்களில் எப்போதும் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதிலும் பூவெல்லாம் கேட்டுப்பார் படம் இரண்டு இசையமைப்பாளர்களைப் பற்றியது. எனவே இசைக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கும் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா போன்ற ஒரு சிறுவன் செட் ஆவாரா என்றுதான் அப்போது பலரும் பேசினார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் தனது இசையால் பதிலளித்தார் யுவன். இன்றுவரை பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் பாடல்கள் அனைத்தும் எவர் க்ரீனாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துக்கு பிறகு உச்சம் தொட்ட யுவன் ஷங்கர் ராஜாயுவனின் மெட்டுக்கள் எல்லாமும் ஹிட்டாகின. இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர், தேவா, கார்த்திக் ராஜா பலரும் தங்களது பெஸ்ட்டை கொடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் உள்ளே வந்து தனது எளிமையான இசை மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார் யுவன். குறிப்பாக செல்வராகவனுடன் அவர் இணைந்து 2000களின் தொடக்கத்தில் யுவன் கொடுத்தது எல்லாமே ஹிட். அதேபோல் ராம், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு, அமீர் என பல இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து யுவன் ஷங்கர் ராஜா உச்சம் தொட்டார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வந்து இன்றுடன் 26 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனையடுத்து அவரது பாடல்கள் தொடர்பான எடிட்டுகள், வீடியோக்கள் என சமூக வலைதளத்தை யுவனின் ரசிகர்கள் கலக்கிவருகின்றனர். மேலும் 26 Years Of Yuvanism என்ற ஹேஷ்டேக்கையும் அவர்கள் ட்விட்ட்ரில் ட்ரெண்டாக்கிவருகின்றனர். 26 வருடங்களை நிறைவு செய்த யுவனுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் அன்புடன் அனுப்பிய மெசேஜ்களுக்கும், வீடியோக்களுக்கும் நன்றி; உங்கள் அனைவருடைய அளவற்ற அன்புக்கும் நன்றி; இந்தாண்டு இன்னும் அதிகப்படியான இசையை உங்களுக்கு வழங்க இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Similar Posts