விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் அதிரடியான மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ள்ளது | The action-packed making video of Vikram starrer ‘Thangalaan’ has been released
நடிகர் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி தங்கலான் படத்தின் சிறப்பு உருவாக்க வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. வித்தியாசமான தோற்றத்தில் அதிரடியான காட்சிகளுடன் இந்த வீடியோ அமைந்துள்ளது.