இதெல்லாம் ஒரு படமா என தனுஷை திட்டிய நடிகை..!(The actress scolded Dhanush saying that this is all a film)
விஐபி படத்தின் ஷூட்டிங் நேரத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் அவரை கூப்பிட்டு, “இதெல்லாம் ஒரு படம்..
இதில் நடிக்க என்னை வேற கூப்பிட்டு இருக்க” என திட்டினாராம். ‘நீங்க படம் முடிஞ்சபிறகு பாருங்க” என சொல்லி அவரை சமாளித்தாராம் தனுஷ்.
‘எனக்கு ஒரு சீனும் இல்ல.. இதுல என் வீட்டுக்கு வந்து வேற கதை சொல்லி பில்டப் கொடுத்த’ என சரண்யா பொன்வண்ணன் மேலும் கூறினாராம்.
ஆனால் படம் முடிந்து டப்பிங் செய்யும் போது தான் படம் எப்படி வந்திருக்கிறது என பார்த்து அவர் வியந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
