கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது | The announcement of Simbu’s new film produced by Kamal Haasan is out
மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன ‘மஃப்ட்டி’ படத்தின் ரீமேக்காக ‘பத்து தல’ படம் உருவாகிறது. இந்த திரைப்படம் மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிம்பு அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தினை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த அறிவிப்பை கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தினை இயக்க உள்ளார்.

2020 ஆம் ஆண்டு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சமீபகாலமாக சிம்புவுடன் இணைந்து தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனால் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. இந்த சூழ்நிலையில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த படம் குறித்து நடிகர் & தயாரிப்பாளர் கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், “சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.