செய்திகள் | திரைப்படங்கள்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது | The announcement of Soori’s new film produced by Sivakarthikeyan is out

சமீப காலமாக சந்தானம், யோகி பாபு உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், அந்த வரிசையில் சூரி புதிதாக இணைந்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நாயகனாக நடித்துள்ள சூரி அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ள சூப்பரான அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

The announcement of Soori’s new film produced by Sivakarthikeyan is out

சந்தானம், யோகி பாபுவை விட ஒரு படி மேலே சென்று சூரி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்திலேயே ஹீரோவாக விடுதலை படத்தில் அறிமுகமாகி உள்ளார். சமீபத்தில் வெளியான அந்த ட்ரெய்லர் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சக்கைப் போடு போட்டு வருகிறது. இளையராஜா இசையில் சூரிக்கு காதல் பாடல்கள் மற்றும் ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ ஜோடி என முதல் படத்திலேயே மாஸ் காட்டுகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சுடும் காட்சிகளில் ஹீரோவாகவே மிரட்டுகிறார் சூரி.

தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இப்படத்தின் தலைப்பும் மற்றும் படக்குழு குறித்த தகவலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் நடிக்கும் இந்த படத்துக்கு “கொட்டுக்காளி” என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கூழாங்கல் படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இப்படத்தை இயக்குகிறார்

The announcement of Soori’s new film produced by Sivakarthikeyan is out

விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவான கூழாங்கல் படத்தை இயக்கி சர்வதேச விருதுகளை குவித்து வரும் தரமான இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் சூரியின் நடிப்பில் கொட்டுக்காளி படம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன.

Similar Posts