செய்திகள் | திரைப்பிரபலங்கள்

திரை உலாவின் தேடலில் இன்றைய திரைப் பிரபலம் – நடிகர் சூர்யா (Tamil actor Surya)

ஜூலை 23 1975 பிறந்த சரவணன் சிவகுமார், தேசிய விருது பெறும் அளவிற்கு புகழ் பெற்ற நடிகர் சூர்யா என்ற திரைப் பிரபலம் ஆனது எப்படி வாங்க பாக்கலாம்.

Actor Surya Childhood image
Actor Surya Childhood image

நடிகராவதற்கு முன்பு

சூர்யா 23 ஜூலை 1975 அன்று சென்னை தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மனைவி லட்சுமிக்கு மகனாக சரவணன் என்ற பெயரில் பிறந்தார். நடிகர் சிவகுமாரின் மூத்த பிள்ளை சூர்யா சூர்யாவின் தம்பி கார்த்தி அவரும் ஒரு சிறந்த தமிழ் நடிகர்.மற்றும் அவரது தங்கை பிருந்தா அவரும் அண்மையில் சினிமாவில் வளர்ந்து வரும் பாடகி எண்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா தனது பள்ளிப் படிப்பை கோயம்பத்தூரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவனிலும், சென்னையில் உள்ள செயின்ட் பேட் பள்ளியிலும் பயின்றார்.
சூரியா சென்னையின் மிகவும் பிரசித்தி மிக்க கல்லூரிகளில் ஒன்றான லொயாலா கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றார்.
சூர்யா சினிமாவுக்கு வருவதற்கு முன்பு 6 மாதங்கள் ஆடை தொழிற்சாலையில் வேலை பார்த்தார்.

திரைப் பயணம்

சூர்யா தனது திரைப்பயணத்தை நேருக்கு நேர் என்ற திரைப்படத்துடன் 1997லில் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் ஆரம்பிக்கிறார்.

நேருக்கு நேர்


கலைஞர்கள் : விஜய் , சூர்யா , கௌசல்யா , சிம்ரன் , ரகுவரன், பிரகாஷ் ராஜ்
இயக்குனர்: வசந்த்
இசை அமைப்பாளர்: தேவா
தயாரிப்பாளர்: மணிரத்னம்
வெளியான தேதி:20 ஜூலை 1997

சூர்யா நேருக்கு நேர் நடிக்க வரும் முன்பே அவருக்கு வசந்த் இயக்கத்தில் ஆசை திரைப்படம் நடிக்கும் வாய்ப்பு வந்தது ஆனால் சூர்யா அதனை மறுத்து விட்ட்டார். அதன் பிறகும் வசந்த் அவரை விடவில்லை அவரது மற்றும் ஒரு படமான நேருக்கு நேரில் நடிக்கும் வாய்ப்பை சூர்யாவுக்கு வழங்குகிறர் .இந்த படத்திற்காக சரவணனாக இருந்த சூர்யாவின் இயற் பெயர் மாற்றப் பட்டு சூர்யாவாக திரைக்கு அறிமுகம் ஆனார் . பெயர் மாற்ற காரணம் ஏற்கனவே தமிழ் சினிமாவில் சரவணன் என்ற பெயரில் ஒரு நடிகர் இருக்கிறார் என்பதால் பெயர் மாற்ற பட்டது. நேருக்கு நேர் சூர்யாவுக்கு அந்தளவு பெரிய பெயரை வாங்கிக்கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து
1998 இல் இயக்குனர்: டி.இந்திரகுமாரின் இயக்கத்தில் சந்திப்போமா படத்தில் ப்ரீத்தாவுடன் இணைந்தும், 1998 இல் இயக்குனர்: இந்திரன் இயக்கத்தில் கதலே நிம்மதி ஜீவிதாவுடனும் ,1999 இல் இயக்குனர்: எஸ்.ஏ.சந்திரசேகர் பெரியண்ணா படத்தில் நடிகர் விஜயகாந்துடனும் இணைந்து நடித்த சூர்யாவுக்கு இதில் எந்த திரைப்படமும் பெரிதாக பேசப்படவில்லை.

பல விமர்சன மற்றும் வணிகரீதியான தோல்விகளுக்குப் பிறகு, சூர்யா மீண்டும் வசந்துடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் (1999), அவரது மனைவி ஜோதிகாவுடன் (அவரது முதல் படம்) ஜோடி சேர்ந்து நடித்தார் இந்த திரைப்படமும் கலவையான விமர்சனத்தேய பெற்றது. 2000 இல் இயக்குனர் கே.ஆர்.ஜெயா இயக்கத்தில் உயிரிலே கலந்தது படத்தில் மீண்டும் ஜோதிகாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் இப்படமும் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. 2001 இல் இயக்குனர் சித்திக் இயக்கத்தில் விஜய் மற்றும் ரமேஷ் கண்ணாவுடன் சேர்ந்து பிரன்ஸ் படம் நடித்திருந்தார் இதில் பெரிதாக பேசப்பட்டது விஜயின் கதாபத்திரமே.

நந்தா தந்த மாற்றம்

2001 ஆம் ஆண்டில், பாலாவின் நந்தாவில் ஒரு முன்னாள் குற்றவாளியாக சூர்யா நடித்தார். அந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது மற்றும் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

2002 இல் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் உன்னை நினைத்து லைலா மற்றும் சினேகாவுடனும் நேர்மறையான விமர்சனத்துடன் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் ஆனது. 2002இல் இயக்குனர் அமீர் சுல்தான் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே படமும் த்ரிஷா மற்றும் லைலாவுடனும் நேர்மறையான விமர்சனத்துடன் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் ஆனது. ஆனால் 2002 இல் இயக்குனர் புஷ்பவாசகன் இயக்கத்தில் சூர்யா ஸ்ரீ ஸ்ருதிகாவுடன் நடித்த ஸ்ரீ படம் அவருக்கு தனி இடத்தை பெற்று கொடுக்கவில்லை

பேரழகன் – விருது பெற்ற சூர்யா


அடுத்த ஆண்டு,இயக்குனர் சசிசங்கர் இயக்கத்தில் அவர் இரட்டை வேடங்களில் பேரழகனில் நடித்தார் – ஒரு ஹன்ச்பேக் மற்றும் ஒரு கல்லூரி மாணவனாக ஜோதிகாவுடன் நடித்திருந்தார். பேரழகன் சூர்யாவின் நடிப்பு மீண்டும் பாராட்டப்பட்டது, மேலும் அவர் தனது முதல் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.

காக்கா காக்க – மிகப் பெரிய வணிக வெற்றி

அதனை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்‌ஷன் படமான காக்கா காக்கவில் போலீஸ் அதிகாரியாக தனது திறமையை வெளிப்படுத்தினர் அதிலும் ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார்.

பிதாமகன் – மிகச் சிறந்த நடிப்பு

2003ல் பாலாவின் இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் லைலாவுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு இடத்தை ரசிகர்களிடம் பெற்று கொண்டார். அத்துடன் அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தினார்.இரண்டு படங்களிலும் சூர்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது, 51வது பிலிம்பேர் அவார்ட்ஸ் சவுத் விழாவில் பிதாமகனுக்காக சிறந்த நடிகருக்கான பரிந்துரையையும், சிறந்த துணை நடிகருக்கான பரிந்துரையையும் வென்றார்.

2004 இல் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த ஆயுத எழுத்து திரைப்படத்தில் மாணவர் தலைவராக நடித்ததற்காகவும் அவர் பாராட்டப்பட்டார். 2005 இல், இயக்குனர் சிங்கம்புலி இயக்கத்தில் ஜோதிகாவுடன் இணைந்து மாயாவி பெரிதா பேசப்படவில்லை.

தொடர் வெற்றி படங்கள்

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அசின் மற்றும் நயன்தாராவுடன் இணைந்து 29 செப்டெம்பர் 2005 இல் கஜினி சூப்பர் ஹிட் ஆனது. கஜினியில் மறதி நோய் உள்ள ஒரு தொழிலதிபராக அவரது நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் திரிஷாவுடன் இணைந்து 09 டிசம்பர் 2005 இல் வெளியான ஆறு வெற்றி பெற்றது, அத்துடன் 2006 இல் இயக்குனர் என். கிருஷ்ணா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் பூமிகாவுடன் இணைந்து சில்லுன்னு ஒரு காதல் படம் வெளிவந்தது. அதிகப்படியான காதல் செண்டிமெண்ட் ரொமாண்டிக் கலந்த படமாக இது அமைந்திருந்தது மேலும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இவ்வாறு மூன்று தொடர் வெற்றி படங்களை கொடுத்தார் சூர்யா.

வெற்றி படங்களுடன் ஆரம்பமான திருமண வாழ்வு

பல படங்களில் ஜோடியாக நடித்த சூர்யாவும் ஜோதிகாவும் நிய வாழ்விலும் ஜோடியாக ஒன்று சேர்க்கிறார்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தார்கள் அனல் அந்த காதலை சூர்யாவின் தந்தையான சிவகுமார் ஏற்க மறுக்க கிட்ட தட்ட 7 வருடங்கள் சூரியவின் தந்தை முடிவுக்காக காத்திருந்து முடிவில் தந்தை திருமணதிக்கு ஓகே சொல்கிறார் அத்துடன் ஒரு நிபந்தனை வைக்கிறார் இனி ஜோதிகா படம் நடிக்க கூடாது என்று அதை இருவரும் ஏற்று கொல்கிறார்கள் பின் பெற்றோர் ஆசியுடன் செப்டம்பர் 11, 2006 திருமணம் நடை பெற்றது. இன்று வரை குடும்ப வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள் தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இரண்டு குழந்தைகளும் அவர்களின் பிரபல பெற்றோர்களைப் போலவே பிரபலமானவர்கள்.

திரைப்பயணம் தொடர்கிறது

2007 இல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அசினுடன் இணைந்து வேல் திரைப்படம் மிகவும் வெற்றி, வெற்றி மட்டும் இன்றி அதிக குடும்ப ஓடியன்ஸையும் தனதாக்கினார் சூர்யா. பிறகு சூர்யா காதல் நாயகனாக நடித்த வாரணம் ஆயிரம் 2008 இல் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா மற்றும் சிம்ரனுடன் இணைந்து தோன்றினார். அவரது தந்தை மற்றும் மகனாக இரட்டை வேடம் அவருக்கு மற்றொரு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது.

மக்கள் தொண்டனாக

2008 இல், அவர் அகரம் அறக்கட்டளையைத் தொடங்கினார் சூர்யா அவரின் தந்தை நடிகர் சிவக்குமார் 1979 ஆம் ஆண்டு தனது சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மூலம் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறார். தந்தையின்அறக்கட்டளை போல சூர்யாவின் அகரம் அறக்கட்டளை தமிழ்நாட்டில் உள்ள ஏழை மாணவர்களது கல்வி மற்றும் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை மாணவர்களுக்கும் உயர் கல்விக்கான உதவித்தொகை வழங்குகிறது.

திரைப்பயணம் தொடர்கிறது

சூர்யாவின் அடுத்த மூன்று படங்கள் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தமன்னாவுடன் இணைந்து அயன் (2009), இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஆதவன் (2009) மற்றும் சிங்கம் (2010). பிந்தையது, அதில் அவர் அனுஷ்கா ஷெட்டியுடன் நடித்தார்,மூன்று படங்களும் தொடர் வெற்றியை சூரியாவுக்கு பெற்று கொடுத்தது ஆனால் சிங்கம் திரைப்படம் இன்றுவரை வந்த அவரது திரைப்படங்களில் வணிக ரீதியாகவும் மிகவும் வெற்றிகரமான திரைப்படமாகும்.

இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் பிரியாமணிடன் இணைந்து ரத்த சரித்திரம் படம்மூலம் தமிழ் மட்டும் இல்லாமல் சூர்யா இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.2010 கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மன்மதன் அம்பு படத்தில் (கெஸ்ட் ரோல்) செய்துள்ளார்.

2011 இல் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஸ்ருதி ஹாசனனுடன் இணைந்து 7ஆம் அறிவு, சூர்யா இதில் புத்த துறவி, ஷாலின் குங் ஃபூ போதிதர்மா மற்றும் அவரது கற்பனை வழித்தோன்றல் அரவிந்தின் படைப்பாளியாக சூர்யா நடித்தார்.

2012 இல் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான படம் மாற்றான், இதில் சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்தார் இதில் காஜல் அகர்வால் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நிகழ்ச்சித்தொகுப்பாளர்

2012 ஆம் ஆண்டு, ஸ்டார் விஜய் கேம் ஷோ, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, யார் கோடீஸ்வரர் ஆக வேண்டும்? என்பதன் தமிழ் பதிப்பின் மூலம் தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமானார்.

தயாரிப்பு மற்றும் விநியோகம்

2டி என்டர்டெயின்மென்ட் என்பது சூர்யாவால் 2013 இல் நிறுவப்பட்ட ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாகும். இதில் தொடர்புடைய மற்ற முக்கிய நபர்கள் ராஜசேகர் பாண்டியன், சூர்யாவின் மனைவி ஜோதிகா மற்றும் சூரியாவின் சகோதரர் கார்த்தி. சூர்யாவின் குழந்தைகளான தியா மற்றும் தேவ் ஆகியோரின் தொடக்கக் கடிதத்தால் இந்த நிறுவனத்திற்கு பெயரிடப்பட்டது. நிறுவனம் 2013 இல் நிறுவப்பட்டது.

சிங்கம்1 னின் வெற்றியை தொடந்து சிங்கம் II என்பது ஹரி எழுதி இயக்கிய 2013 ஆம் ஆண்டு வெளியான அதிரடித் திரைப்படமாகும்.2010 ஆம் ஆண்டு வெளியான சிங்கம் திரைப்படத்தின் தொடர்ச்சி மற்றும் சிங்கம் திரைப்படத் தொடரின் இரண்டாம் பாகம், இத்திரைப்படத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் சிங்கம் பட வரிசையில் இரண்டாம் பாகம். கடலோர நகரமான தூத்துக்குடியில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை ஒழிக்க ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள துரை சிங்கம் என்ற போலீஸ் ஆகா சூர்யா நடித்திருந்தார் 2D என்டர்டெயின்மென்ட் மூலம் விநியோகிக்கப்படுகிறது. பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்று தந்தது.

2014 இயக்குனர் என். லிங்குசாமி இன் இயக்கத்தில் அஞ்சான் படம் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார்.ஒரு அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும்.
2015 இயக்குனர் பாண்டிராஜ் இன் இயக்கத்தில் , அமலா பாலுடன் இணைந்து நடித்திருந்தார் சூர்யா இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கான திரைப்படமாகும் இது சூர்யாவின் பிளாக்பஸ்டர் படமாகும்.

2015 2D என்டேர்டைன்மெண்ட்னுடாக சூர்யா காதல் மனைவியான ஜோதிகாவின் திரை பயணத்தை மீண்டும் தொடக்கிவைக்கிறார்.

2016 இல் விக்ரம் குமாரின் (24) அறிவியல் புனைகதைத் திரைப்படத்தில் அவர் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்தார், இவருக்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன் நடித்திருந்தார்கள் அது அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது மேலும் அவரது நடிப்பு அவருக்கு பிலிம்பேரில் சிறந்த நடிகருக்கான விமர்சகர் விருதைப் பெற்றுத்தந்தது. இந்த படம் 2D என்டேர்டைன்மெண்ட்னுடாக சூர்யாவால் வெளியிடப்பட்ட்து.

சிங்கம் 3 ஹரி எழுதி இயக்கிய 2017 ஆம் ஆண்டு வெளியான அதிரடித் திரைப்படமாகும். சிங்கம் II (2013) இன் தொடர்ச்சி மற்றும் சிங்கம் திரைப்படத் தொடரின் மூன்றாவது படம், இதில் சூர்யா மற்றும் அனுஷ்கா ஷெட்டி (இருவரும் முதல் இரண்டு படங்களில் தங்கள் பாத்திரங்களை மீண்டும் நடித்தனர்), அதே நேரத்தில் ஹன்சிகா மோத்வானி (முன்னர் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார்) இந்தத் தொடரில் ஸ்ருதி ஹாசன் மற்றும் தாக்கூர் அனூப் சிங் ஆகியோருடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது சூர்யா மற்றும் ஹரி இணையும் ஐந்தாவது படம்.சாதகமற்ற விமர்சனங்களைப் பெற்ற போதிலும், படம் ₹110 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் படி “சூப்பர்ஹிட்” ஆனது.

தானா சேர்ந்த கூட்டம் விக்னேஷ் சிவன் இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான கிரைம் அன்ட் நகைச்சுவைத் திரைப்படம்.
இதில் கீர்த்தி சுரேஷ் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இது விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

NGK (நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்) செல்வராகவன் எழுதி இயக்கி 2019 ஆம் ஆண்டு வெளியான அரசியல் அதிரடித் திரைப்படமாகும் சூர்யா, சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.விமர்சகர்களிடமிருந்து கலவையான-எதிர்மறையான விமர்சனங்களுக்கு வெளியிடப்பட்டது.

காப்பான் 2019 ஆம் ஆண்டு கே. வி. ஆனந்த் எழுதி, இயக்கி மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் இணைந்து எழுதியுள்ளார். இத்திரைப்படத்தில் சூர்யா, சாயிஷா சைகல், மோகன்லால் மற்றும் ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். .விமர்சகர்களிடமிருந்து கலவையான-எதிர்மறையான விமர்சனங்களுக்கு வெளியிடப்பட்டது.

தொடர்ந்து 3 படங்கள் விமர்சகர்களிடமிருந்து கலவையான-எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்த சூர்யாவுக்கு சூரரைப் போற்று ஒரு திருப்பு முனையாக அமைந்தது .சூரரைப் போற்று 2020 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும், இது சுதா கொங்கரா எழுதி இயக்கியது மற்றும் சூர்யா, ஜோதிகா மற்றும் குணீத் மோங்கா ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. ஷாலினி உஷா நாயருடன் இணைந்து கொங்கரா திரைக்கதையை எழுதினார், அலிஃப் சுர்தி மற்றும் கணேஷா ஆகியோர் கூடுதல் திரைக்கதையை வழங்கினர், மேலும் விஜய் குமார் மற்றும் பி. விருமாண்டி ஆகியோர் வசனங்களை எழுதினார்கள். இப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் நடித்துள்ளனர், மோகன் பாபு, ஊர்வசி மற்றும் கருணாஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

சூரரைப் போற்று விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது, படத்தின் முக்கிய தொழில்நுட்ப அம்சங்களுக்காகவும், எழுத்து, சூர்யாவின் நடிப்பு மற்றும் கொங்கோராவின் இயக்கத்திற்கான பாராட்டுக்களுடன் பாராட்டப்பட்டது. 78வது கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவின் கீழ் திரையிடப்பட்ட பத்து இந்தியப் படங்களில் ஒன்றாக இது தேர்ந்தெடுக்கப்பட்டது. ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் பனோரமா பிரிவில் இப்படம் நுழைந்தது. 68வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா), சிறந்த திரைக்கதை (கொங்கரா மற்றும் நாயர்) மற்றும் சிறந்த பின்னணி இசை (பிரகாஷ் குமார்) ஆகிய ஐந்து விருதுகளை வென்றது. இந்தி ரீமேக், மீண்டும் கொங்கரா இயக்கியது மற்றும் சூர்யா தயாரித்தது, தயாரிப்பில் உள்ளது, ராவல் அவரது பாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார்.

இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார் 2021 இல் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்துள்ளனர். இப்படத்தில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ளனர், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் காவல்துறையின் சார்பு மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகத்திற்கு எதிரான அரச வன்முறை ஆகியவற்றைக் கையாள்கிறது.

1993 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நீதியரசர் கே. சந்துருவால் தொடரப்பட்ட வழக்கு,[3] இது இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த செங்கேனி மற்றும் ராஜகண்ணு தம்பதியினரின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. ராஜாக்கண்ணு காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் போனார். காவல் நிலையத்தில் இருந்து. செங்கேனி தன் கணவனுக்கு நீதி கிடைக்க வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறாள்.
2டி என்டர்டெயின்மென்ட் ஆல் அமேசான் பிரைம் வீடியோவில் ஜெய் பீம் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து உலகளாவிய பாராட்டைப் பெற்றது, அவர்கள் கதை, நடிப்பு, இயக்கம் மற்றும் சமூக செய்தியைப் பாராட்டினர், 2021 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் மற்றும் இந்திய திரைப்படங்களில் ஒன்றாக படத்தைப் பட்டியலிட்டன 94வது அகாடமி விருதுகளில் இப்படம் தேர்வுப் பட்டியலில் இடம் பெறவில்லை.

எதற்கும் துணிந்தவன் என்பது ET என்ற ஆரம்ப எழுத்தின் கீழ் அறியப்படுகிறது, இது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2022 வெளிவந்த ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாகும், மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இப்படத்தில் சூர்யா, பிரியங்கா அருள் மோகன் மற்றும் வினய் ராய் ஆகியோர்
ஆக்ஷன் காட்சிகள் மற்றும் படத்தில் வெளிப்படுத்தப்பட்ட சமூகச் செய்தி ஆகியவற்றிற்காகப் பாராட்டியதோடு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

சிறப்பு தோற்றம்

2022 இல் வெளிவந்த ராக்கெட்ரி மற்றும் விக்ரம் படங்களில் கெஸ்ட் ரோல் செய்துள்ளார் .விக்ரம் படத்தில் கெஸ்ட் ரோல் செய்திருந்தாலும் கூட அவருடைய நடிப்பால் அனைத்து இளைஞர்கள் மனதிலும் சிம்மாசனம் போட்டு உற்காந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

வரவிருக்கும் சூர்யாவின் படங்கள்


வணங்கான்
கலைஞர்கள்: சூர்யா, மமிதா பைஜு, கிருத்தி ஷெட்டி
இயக்குனர்: பாலா
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார்
வெளியீட்டு நிலை: உறுதிப்படுத்தப்படவில்லை

வாடிவாசல்
கலைஞர்: சூர்யா, அமீர் சுல்தான்
இயக்குனர்: வெற்றிமாறன்
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார்
வெளியீட்டு நிலை: உறுதிப்படுத்தப்படவில்லை

சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட்னால் தயாரிக்கப்பட்ட படங்களின் தொகுப்பு


2015 36 வயதினிலே
2015 பசங்க 2
2016 24
2017 மகளிர் மட்டும்
2018 கடைக்குட்டி சிங்கம்
2019 உறியடி 2
2019 ஜாக்பாட் கல்யாண்
2020 பொன்மகள் வந்தாள்
2020 சூரரைப் போற்று
2021 ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்
2021 உடன்பிறப்பே
2021 ஜெய் பீம்
2022 ஓ மை டாக்
2022 விருமன்

விநியோகிக்கப்பட்ட திரைப்படங்கள்


சிங்கம் 2 (2013)
கடுகு (2017)
சில்லு கருப்பட்டி (2019)
கார்கி (2022)

ஒலிப்பதிவுகள் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள்


கடுகு (2017)
மகளிர் மட்டம் (2017)

விருதுகள்

நேருக்கு நேர் (1997) திரைப்படத்தில் அறிமுகமானார், இது அவருக்கு தினகரனை சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை வென்றது. 2002 ஆம் ஆண்டில் நந்தா திரைப்படத்திற்காக தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார், இது அவரது வாழ்க்கையில் பெரும் இடைவெளியாக அமைந்தது. பிதாமகன் (2003) திரைப்படத்திற்காக தனது துணைப் பாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான முதல் பிலிம்பேர் விருதை வென்றார். சூர்யா பன்னிரெண்டு முறை பரிந்துரைக்கப்பட்டார் மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகளை வென்றார், அதில் மூன்று சிறந்த நடிகருக்கான மூன்று மற்றும் விமர்சகர்களுக்கான சிறந்த நடிகருக்கான ஒரு விருது 24 இல் மூன்று வேடங்களில் நடித்ததற்காக. விஜய் விருதுகளில் அவர் பதின்மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டு ஐந்து விருதுகளை வென்றார். 2008 ஆம் ஆண்டில், அவர் ஐகான் ஆஃப் தி இயர் சிறப்பு விருதை வென்றார், மேலும் 2010 ஆம் ஆண்டில், விஜய் டிவியின் அகரம் அறக்கட்டளை மூலம் தனது பங்களிப்பிற்காக சிறந்த நலன்புரி வழங்குநரைப் பெற்றார். 2022 இல் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தனது முதல் தேசிய விருதை வென்றார்.

ஃபிலிம்பேர் விருதுகள் சவுத்

ஃபிலிம்பேர் விருதுகள் சவுத் என்பது தென்னிந்தியத் திரைப்படத் துறையில் உள்ள தொழில் வல்லுநர்களின் கலை மற்றும் தொழில்நுட்ப சிறப்பம்சங்களை கௌரவிக்கும் வகையில் தி டைம்ஸ் குழுவால் வழங்கப்படும் வருடாந்திர பிலிம்பேர் விருதுகளின் தென்னிந்தியப் பிரிவாகும். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களுக்கு தனித்தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஆண்டு ரீதியாக ஃபிலிம்பேர் விருதுக்கான முடிவுகள்


2002 நந்தா சிறந்த நடிகர் – தமிழ் – பரிந்துரைக்கப்பட்டார்
2003 மௌனம் பேசியதே – தமிழ் – பரிந்துரைக்கப்பட்டார்
2004 பிதாமகன் சிறந்த துணை நடிகர் – தமிழ் – வென்றார்
2004 காக்க காக்க சிறந்த நடிகர் – தமிழ் – பரிந்துரைக்கப்பட்டார்
2005 பேரழகன் – தமிழ் வென்றார்
2006 கஜினி பரிந்துரைக்கப்பட்டது
2009 வாரணம் ஆயிரம் வென்றது
2010 அயன் பரிந்துரைக்கப்பட்டார்
2011 சிங்கம் பரிந்துரைக்கப்பட்டது
2012 7 ஆம் அறிவு பரிந்துரைக்கப்பட்டது
2013 மாற்றான் பரிந்துரைக்கப்பட்டது
2014 சிங்கம் 2 பரிந்துரைக்கப்பட்டது
2017 24 சிறந்த நடிகர் தமிழ் வென்றார்

சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகள் (ITFA)


சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகள் (ITFA) என்பது தமிழ்த் திரைப்படங்களில் உள்ள கலைச் சிறப்பைக் கௌரவிக்கும் ஒரு விருது விழா ஆகும். இந்த விருதுகள் முதன்முதலில் 2003 இல் வழங்கப்பட்டன.

ஆண்டு ரீதியாக சர்வதேச தமிழ் திரைப்பட விருதுக்கான முடிவுகள்

2004 காக்கா காக்க சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்


ஸ்டார்டஸ்ட் விருதுகள் (Stardust Awards)


ஸ்டார்டஸ்ட் திரைப்பட இதழால் வழங்கப்படும் ஸ்டார்டஸ்ட் விருதுகள் 2003 இல் தொடங்கியது. அவை திரைப்படத் துறையில் புதிய திறமைகளைக் கொண்டாடுவதோடு தற்போதைய நட்சத்திரங்களையும் கௌரவிக்கின்றன.

ஆண்டு வகை திரைப்பட முடிவு
2011 ரக்த சரித்ரா 2 நாளைய சூப்பர் ஸ்டார் – ஆண் பரிந்துரைக்கப்பட்டார்

ஸ்டார் விஜய் விருதுகள் (STAR VIJAY AWARDS)


தமிழ் சினிமாவில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் வகையில் 2006 ஆம் ஆண்டு முதல் தமிழ் தொலைக்காட்சியான STAR விஜய்யால் விஜய் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.ஆண்டு திரைப்பட வகை முடிவு


2009 வாரணம் ஆயிரம் சிறந்த நடிகருக்கான விருது
2010 அயன், ஆதவன் இந்த ஆண்டின் சிறந்த என்டர்டெய்னர் வென்றார்
அகரம் அறக்கட்டளை (படம் அல்ல) சிறந்த நலன்புரி வழங்குநர் வென்றார்
2011 ரத சரித்திரம் சிறந்த நடிகருக்கான பரிந்துரை
சிங்கம் என்டர்டெய்னர் ஆஃப் தி இயர் வென்றது
பிடித்த ஹீரோ நாமினேட்
2012 7ஆம் அறிவு பரிந்துரைக்கப்பட்டது
2013 மாற்றான் பரிந்துரைக்கப்பட்டது
பிடித்த ஹீரோ நாமினேட்
2014 சிங்கம் II பரிந்துரைக்கப்பட்டது
2015 அஞ்சான் பரிந்துரைக்கப்பட்டது
2018 சிங்கம் 3 பரிந்துரைக்கப்பட்டது


மற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரம்


ஆண்டு திரைப்பட விருது வகை முடிவு
1998 நேர்க்கு நேர் தினகரன் விருதுகள் தினகரன் சிறந்த புதுமுக நடிகருக்கான விருது வென்றார்
2008 கஜினி சவுத் ஸ்கோப் விருதுகள் அந்த ஆண்டின் ஸ்டைல் ​​ஐகான் வென்றது
2009 மிகவும் ஸ்டைலிஷ் நடிகருக்கான வாரணம் ஆயிரம் சவுத் ஸ்கோப் விருது பரிந்துரைக்கப்பட்டது
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் வென்றன
2010 அயன் சவுத் ஸ்கோப் விருதுகள் சிறந்த நடிகருக்கான சவுத் ஸ்கோப் விருது பரிந்துரைக்கப்பட்டது
ஆதவன், அயன் அமிர்தா மாத்ருபூமி விருது சிறந்த நடிகர் – தமிழ் வென்றது
ஆதவன் மீரா இசையருவி தமிழிசை விருது ஒரு பாடலில் சிறந்த நடிப்பிற்காக (“டமக்கு டமக்கு”) வென்றார்.
2011 ரக்த சரித்ரா 2 AXN அதிரடி விருதுகள் எதிர்மறையான பாத்திரத்தில் சிறந்த அதிரடி நடிகராக பரிந்துரைக்கப்பட்டது
2016 36 வயத்தினிலே பிஹைண்ட்வுட்ஸ் தங்கப் பதக்கம் விருதுகள் பிஹைண்ட்வுட்ஸ் சிறந்த அறிமுக தயாரிப்பாளர் (2டி என்டர்டெயின்மென்ட்) வென்றார்
2017 24 ஜீ சினி விருதுகள் – அந்த ஆண்டின் தெலுங்கு சவுத் சென்சேஷன் வென்றது
கோலிவுட் சினிமாவா விருதுகள் சிறந்த வில்லன் வென்றது
ஃபிலிமிபீட் விருதுகள் தமிழில் சிறந்த வில்லன் விருது வென்றது
2020 நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் (2டி என்டர்டெயின்மென்ட்), அகரம் அறக்கட்டளை நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் NTFF 2020 கலைச்சிகரம் விருது வென்றது
2021 சூரரைப் போற்று சினிமா அதன் சிறந்த விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றது 2021 – 22 ஜெய் பீம் நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் சிறந்த திரைப்படம் வென்றது

தேசிய திரைப்பட விருதுகள் (NATIONAL AWARDS)


ஆண்டு வகை திரைப்பட முடிவு
2020 சிறந்த நடிகர் சூரரைப் போற்று வென்றார்
சிறந்த திரைப்படம் வென்றது

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்


தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் இந்தியாவில் தமிழ் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் மிகவும் குறிப்பிடத்தக்க திரைப்பட விருதுகள் ஆகும். தமிழக அரசால் தென்னிந்தியத் திரைப்படத் துறைக்கு ஊக்கமும் ஊக்கமும் அளிக்கவும், சிறந்த திறமையாளர்களை கவுரவிக்கவும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டு திரைப்பட வகை முடிவு
2001 நந்தா சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்
2005 கஜினி சிறப்புப் பரிசு வென்றது
2008 வாரணம் ஆயிரம் வென்றது

சென்னை டைம்ஸ் திரைப்பட விருதுகள்


தி டைம்ஸ் ஆஃப் இந்தியா வழங்கும் சென்னை டைம்ஸ் திரைப்பட விருதுகள் தமிழ்த் திரையுலகில் சிறந்தவர்களைக் கொண்டாடும் வகையில் வழங்கப்படுகின்றன.

ஆண்டு திரைப்பட வகை முடிவு
2012 7ஆம் அறிவு சிறந்த நடிகராக பரிந்துரைக்கப்பட்டது
2013 மாற்றான் பரிந்துரைக்கப்பட்டது

சினிமாமேன் விருதுகள்


சினிமா விருதுகள் ஐதராபாத்தை தளமாகக் கொண்ட ஒரு தொலைக்காட்சி நெட்வொர்க்கான மூவி ஆர்டிஸ்ட்ஸ் அசோசியேஷன் குழுவால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.ஆண்டு திரைப்பட வகை முடிவு


2013 மாற்றான் சிறந்த நடிகர் – தமிழ் வென்றது

சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்


தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படத் துறைகளை உள்ளடக்கிய தென்னிந்தியத் திரைப்படத் துறையில் உள்ள தொழில் வல்லுநர்களின் கலைத் திறனைக் கௌரவிக்கும் வகையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தால் ஆண்டுதோறும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன.


2002 சிறந்த பிரபல தமிழ் நடிகருக்கான முன்னணி பாத்திரத்தில் நந்தா வென்றார்

எடிசன் விருதுகள்


எடிசன் விருதுகள் தமிழ் தொலைக்காட்சி சேனலான MyTamilMovie.com மூலம் 2009 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கி வருகிறது.

ஆண்டு திரைப்பட வகை முடிவு
2017 24 சிறந்த கதாநாயகன் வென்றார்
சிறந்த எதிரி வென்றார்

சூர்யா ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த மனிதரும் கூட தனக்காக தனது தொழிலை தூக்கி போட்ட மனைவியின் கனவை நிறைவு செய்து நல்ல கணவராகவும் தனது பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்தும் தன்னை வாழவைத்த மக்களுக்கு என்ன பிரச்சனை வந்தாலும் எதிர்த்து குரல் கொடுத்ததும் சமுதாய அக்கறையுடனும் பொறுப்புடனும் தனது வேலைகளை சரிவர செய்யும் மாமனிதன்.. சூர்யா எனும் பொக்கிஷத்தை இவ் உலகுக்கு கொண்டு வந்ததுக்காக சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமாருக்கும் தாய் லட்சுமிக்கும் அத்துடன் சூர்யாவை திரைக்கு அறிமுகம் செய்த வசந்துக்கும் திரை உலா சார்பாக நன்றி.

தமிழ்த் திரை உலகில் நடிகராக, தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக சிறந்து விளங்கும் சூர்யா மென் மேலும் பல சாதனைகள் புரிந்து வெற்றி நடை போட திரை உலா சார்பாக வாழ்த்துகிறோம்.

Similar Posts