செய்திகள் | திரைப்படங்கள்

தணிக்கைக்குழு விடுதலைப்படத்திற்கு ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. | The Censor Board has given an A certificate to the Viduthalai film.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள திரைப்படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கி ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, கௌதம் மேனன் என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

The Censor Board has given an A certificate to the Viduthalai film

இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். இதுவரை நகைச்சுவை நடிகராக இருந்த சூரி இந்த படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இதில், தனுஷ் பாடிய உன்னோடு நடந்த பாடலுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

விடுதலை திரைப்படம் மார்ச் 31ந் தேதி வெளியாக உள்ளநிலையில்,
இத்திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கி உள்ளது. வெற்றிமாறனின் பொல்லாதவன், வடசென்னை படத்திற்கு சென்சார் போர்டு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த நிலையில், விடுதலைப்படத்திற்கும் ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது.

Similar Posts