செய்திகள்

தங்களது திருமணத்தை உறுதி செய்த தம்பதியினர்..!

நடிகை கியாரா அத்வானி மற்றும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவிடம் காதலி கியாராவுடன் எப்போது திருமணம் என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்க்கு பதிலளித்த சித்தார்த், ” நாங்கள் இருவரும் நீண்ட காலமாக எங்களுடைய எதிர்கால வாழ்க்கையை திட்டமிட்டு வருகிறோம். சரியான நேரும் வரும்போது எங்கள் எதிர்கால திட்டங்களை பற்றி நிச்சயமாக தெரிவிப்போம் ” என்று பதிலளித்துள்ளார்.

இதன்முலம், கியாரா அத்வானியுடனானா திருமணத்தை உறுதி செய்துள்ளார் .இந்த தகவல் தான் தற்போது பாலிவுட் திரையுலகில் டாப் செய்தியாகி வலம் வந்துகொண்டிருக்கிறது.

Similar Posts