செய்திகள்

2 பிள்ளையின் தகப்பனான இயக்குனரே நடிகை தீபாவின் மரணத்திற்கு காரணம்..(The director who is the father of 2 children is responsible for the death of actress Deepa)

நடிகை தீபா உதவி இயக்குநரான சிராஜுதீன் என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது.சிராஜுதீன் தான் இயக்கும் படத்தில் தீபாவை ஹீரோயினாக நடிக்க வைப்பதாக கூறி ஆசைக்காட்டி பழகியுள்ளார்.

இருவரும் நெருக்கமாக பழகிய நிலையில் சிராஜுதீன் தீபாவை விட்டு விலகியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.தீபா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக சிராஜுதீனிடம் போனில் பேசியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியிருப்பது தெரியவந்துள்ளது. 

இதனிடையே தீபாவின் காதலரான சிராஜுதீன் படப்பிடிப்பில் உள்ளதால் விசாரணைக்கு ஆஜராக நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிராஜுதீனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 பிள்ளைகள் உள்ள நிலையில் தீபாவையும் காதலித்து அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Actress Deepa

Similar Posts