ஆர்யா, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியனது. | The first look poster of Arya and Gautham Karthik starrer is out.
விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த ‘எஃப்ஐஆர்’ (‘FIR’ ) படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மனு ஆனந்த்த் இயக்கத்தில் நடிகர் ஆர்யாவும், கவுதம் கார்த்திக்கும் புதிய படத்தில் இணைகிறார்கள் என்று முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம்.

படத்தின் அனைத்து வேலைகளும் தொடங்க உள்ள நிலையில், படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர், அதற்கு ‘மிஸ்டர் எக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர், படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என்று தெரிகிறது. ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.