சின்னத்திரை

நகைச்சுவை தவறாகிவிட்டது, மன்னிப்பு கேட்ட நடிகர் ராஜூ..!(The joke went wrong, actor Raju apologized)

பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ராஜூ ஜெயமோகன் ரன்பீருக்கு தமிழ் கற்றுக் கொடுக்கிறேன் என்ற பெயரில் சென்னை, மதுரை, கோயும்புத்தூர் வட்டார மொழிகளை பேச கற்றுக் கொடுத்தார்.

அப்போது அவர் சென்னை வட்டார வழக்கு பற்றி பேசும் போது சென்னை மக்களை இழிவுப்படுத்தும் தோரணையில் இருந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதனையடுத்து ராஜூவை சோஷியல் மீடியாவில் பலரும் திட்ட ஆரம்பித்தனர்.

புரிந்து கொண்ட ராஜூ ‘நகைச்சுவைக்காக செய்தது தவறாக மாறியதற்காக வருந்துகிறேன். இரிடேட் ஆக வேண்டாம். மன்னிக்கவும்’ என பதிவிட்டுள்ளார்.

actor Raju

Similar Posts