சின்னத்திரை

போட்டோவை மார்பிங் பண்ணிட்டாங்க, க‌ண்ணீருடன் நடிகை லட்சுமி வாசுதேவன்..!(The photo was morphed, actress Lakshmi Vasudevan with tears)

பிரபல தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், சரவணன் மீனாட்சி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, முத்தழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் லட்சுமி வாசுதேவன். 

இந்த நிலையில், இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

“போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. 5 லட்சம் பர்சனல் லோன், கிப்ட் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை க்ளிக் செய்ததும் ஒரு ஆப் டவுன்லோட் ஆனது. அடுத்த நிமிடமே போன் ஹேக் ஆகிவிட்டது. “

“அதன் பின் 5000 லோன் வாங்கி இருக்கிறீர்கள் என சொல்லி மெசேஜ்கள் மற்றும் அழைப்புகள் வந்தது. அதனை தொடர்ந்து அது ஆபாச அழைப்புகளாக மாறியது. தற்போது என் காண்டாக்ட்களில் இருப்பவர்களுக்கு எனது தவறான மார்பிங் போட்டோக்களை அனுப்பி இருக்கிறார்கள், வேறொரு நம்பரில் இருந்து இதை செய்கிறார்கள்.”

“இது பற்றி சைபர் crimeல் புகார் அளித்து இருக்கிறேன். இது பற்றி மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் வீடியோ வெளியிடுகிறேன்” என அவர் தெரிவித்து இருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “இது போன்ற தப்பான ஒரு லிங்கை கிளிக் பண்ணதால் எனக்கு இப்படி ஒரு நிலைமை. உங்க எண்ணிற்கு ஏதேனும் புது எண்ணில் இருந்து பரிசு விழுந்துள்ளது என்று வந்தால், அந்த லிங்கை தயவு செய்து கிளிக் செய்யாதீங்க..

உங்க மொபைலும் இது போன்று ஹேக் ஆகும். ” என்று அழுதுகொண்டே கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

actress Lakshmi Vasudevan
actress Lakshmi Vasudevan

Similar Posts