பொன்னியின் செல்வன்2 படக்குழுவினர் இசை வெளியீட்டு விழாவிற்கு தயாராகி வருகின்றனர் | The Ponniyin Selvan2 team prepares fiercely for the music release
ஏப்ரல் 28ல் வெளியாகும் 2வது பாகம் இந்தப் படம் கொடுத்த வெற்றியின் சூட்டோடு இரண்டாவது பாகத்தையும் வெளியிட தயாரிப்புத்தரப்பு தீர்மானித்த நிலையில், இதோ, ரிலீசுக்கு தயாராகியுள்ளது பொன்னியின் செல்வன் பார்ட் 2. முன்னதாக முதல் பாகத்தில் கேரக்டர்களின் அறிமுகத்திற்கே அதிகமான அவகாசம் தேவைப்பட்ட நிலையில், அழுத்தமான விஷயங்கள் பகிரப்பட வில்லை என்றே கூறலாம். இந்நிலையில், இரண்டாம் பாகத்தில் இந்தக்குறை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

இன்றைய தினம் இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளார். இதற்காக தற்போது படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்திற்கான உழைப்பு மற்றும் ட்ரெயிலர் உருவாக்கத்திற்கான உழைப்பு ஆகியவற்றை இணைத்து மேக்கிங் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்களுடன் சிஜி வேலைகளுக்காக எவ்வளவு பேர் கணினி முன்பு மெனக்கெட்டனர் என்பதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
படத்தின் காட்சிகளில் மட்டும்தான் பிரம்மாண்டத்தை பார்க்க முடியுமா, அதன் உருவாக்கத்திலும் பார்க்க முடியும் என்பதை இந்த வீடியோ பறைசாற்றுகிறது. மேலும் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் ஜெயராம் உள்ளிட்டவர்களின் டப்பிங் வீடியோவும் இந்த வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது. கார்த்தி டப்பிங் ஸ்டூடியோவில் தன்னுடைய கேரக்டராகவே மாறி, அதே முகபாவனைகளுடன் டப்பிங் கொடுப்பதையும் பார்க்க முடிகிறது. அனைவரின் அர்ப்பணிப்போடு பொன்னியின் செல்வன் படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.