செய்திகள் | திரைப்படங்கள்

ராஷ்மிகா முதன்முறையாக முக்கிய வேடத்தில் நடிக்கும் புதிய படத்தின் பூஜை போட்டோக்கள் வெளியாகியுள்ளன. | The pooja photos of Rashmika’s new film in the lead role for the first time are out.

கற்பனை கலந்த காதல் படமாக உருவாகும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சாந்தரூபன் இயக்கனராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் தேவ் மோகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவை கவனிக்கவுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளாராக தேசிய விருது பெற்ற பங்களான் பொறுப்பேற்றுள்ளார்.

The pooja photos of Rashmika

இன்று பூஜையுடன் ‘ரெயின்போ’ படத்தின் தயாரிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 7 அன்று ஆரம்பமாகிறது.

The pooja photos of Rashmika

தங்களின் முதல் படைப்பிலிருந்தே, தனித்துவமான கதைகளுடன், தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். அந்தவகையில் ‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து தங்களின் முத்திரையைப் பதித்து வரும் ட்ரீம் வாரியர், தங்களின் அடுத்த தயாரிப்பாக ராஷ்மிகா நடிப்பில் ‘ரெயின்போ’ படத்தை அறிவித்துள்ளது.

Similar Posts