ஜெயிலர் படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. | The production company has released the teaser and release date of Jailer.
ரஜினி தற்போது ஜெயிலரில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. முத்துவேல் பாண்டியன் என்ற செம்ம மாஸ்ஸான கேரக்டரில் ரஜினி நடிக்க, அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே ரஜினியின் கேரக்டர் மோஷன் போஸ்டர், ஜெயிலர் தீம் மியூசிக் ஆகியவை வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து தற்போது ரிலீஸ் தேதியை டீசருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. சுதந்திர தின விடுமுறையை குறிவைத்து ஆகஸ்ட்டில் வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ்.

முக்கியமாக ஜெயிலர் ரிலீஸ் தேதியுடன், அசத்தலான டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயிலர் ரிலீஸ் தேதி டீசராக வெளியான இதில், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மிரட்டுகிறார் ரஜினி. அவர் மட்டும் இல்லாமல் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரும் ரெட்ரோ ஸ்டைலில் மாஸ் காட்டியுள்ளனர். அவர்கள் தவிர மற்ற கேரக்டர்களும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளனர். இதனால், ஜெயிலர் படம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது.