இறுதி கட்டத்தை நெருங்கியது ‘பத்து தல’ படப்பிடிப்பு…(The shooting of Pathu Thala is nearing its final stage)
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன ‘மஃப்ட்டி’ படத்தின் ரீமேக்காக ‘பத்து தல’ படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.படப்பிடிப்பு நடுவே ரசிகர்களுடன் சிம்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இயக்குனர் கிருஷ்ணா & சிம்பு ஆற்றின் கரையில் பேசுவது போல இருக்கும் புகைப்படமும், கௌதம் கார்த்திக் & சிம்பு இயக்குனர் கிருஷ்ணாவுடன் சேர்ந்து நடந்து வரும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.


இத் திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
