செய்திகள்

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனை பிரமிக்க வைத்த‌ தென்னிந்திய இயக்குநர்..!(The South Indian director who impressed Hollywood director James Cameron)

டைட்டானிக், அவதார் உள்ளிட்ட படங்களின் இயக்கியதன் மூலம், உலகம் முழுவதும் பெரும் பிரபலம் அடைந்தவர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். சமீபத்தில் அவரது அவதார் 2, 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து, சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில், இவர் RRR படத்தை பார்த்துவிட்டு, பிரம்மித்து போனதாக, இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ஜேம்ஸ் கேமரூன் RRR படத்தை பார்த்ததாகவும், முதல் முறை படத்தை பார்த்த ஜேம்ஸ் கேமரூன் தனது மனைவிக்கு பரிந்துரைத்து மனைவியுடன் அமர்ந்து 2-வது முறை அந்த படத்தை பார்த்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், படம் குறித்து 10 நிமிடங்கள் தன்னிடம் அவர் பேசியதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். உலகையே வியக்க வைத்த ஹாலிவுட் இயக்குநரை, தென்னிந்திய இயக்குநர் ஒருவர் வியக்க வைத்துள்ளது, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Hollywood director James Cameron

Similar Posts