செய்திகள்

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது | The title of Vijay Sethupathi’s new film has been released

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று, பீட்ஸா, சூது கவ்வும், சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார். அவ்வப்போது கேமியோ, வில்லன் ரோல்களிலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

The title of Vijay Sethupathi’s new film has been released

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் , காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், DSP ஆகிய படங்கள் வெளியானது.

விஜய் சேதுபதி நடித்து இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர், விடுதலை, மும்பைக்கர், பிசாசு2, ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

சமீபத்தில் ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் புகழ் பெற்ற இயக்குனர்களான ராஜ் & டிகே இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த Farzi வெப் சீரிஸ், அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சுதன் தயாரிப்பில் குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ‘மகாராஜா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts