இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் போட்ட ட்விட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.| The tweet posted by A.R. Raghuman has caught the attention of many.
தி கேரளா ஸ்டோரி(the kerala story) பட விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரளாவின் மற்றொரு முகம் என்று பதிவிட்டிருந்த சம்பவம் ஒன்றை ரீடுவிட் செய்து, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ள கருத்துக்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் அதா சர்மா, சித்தி இத்லானி, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி. உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பாலிவுட் இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கி உள்ளார். இந்த படம் மே 5ம் தேதி பான் இந்தியா படமாக தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.

இந்த படத்தின் கதை முழுவதும் கேரளாவை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவின் அமைதியை சீர் குலைக்க இப்படியொரு படத்தை உருவாக்கி உள்ளனர் என்றும் இந்த கதையில் உண்மைத் தன்மையே இல்லை என பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

பல்வேறு அரசியல் கட்சிப்பிரமுகர்ளும் இப்படத்திற்கு தங்களது கண்டனங்களை சமூக வலைதளங்களில் தெரிவித்துத் வருகின்றனர். மேலும் நாளை (மே 5) இப்படம் வெளியாவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று நீதிமன்ற கதவுகளையும் தட்டியுள்ளனர். இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற இந்திய சினிமாவின் பிரபல
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுட்ள்ள ஒரு திருமணவீடியோ தேசத்தின் கவனத்தை ஈர்த்துத்ள்ளது.

அவர் ரீடுவிட் செய்துள்ள வீடியோவில், இஸ்லாமிய மசூதியில் இந்து முறைப்படி நடக்கும் திருமணம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி கேரளாவின் ஆலப்புழா மாவட்டட் த்தில் உள்ள காயங்குளம் சேரவல்லி முஸ்லிம் ஜமாத் சர்ச்கமிட்டி நடத்தி வைத்த திருமணநிகழ்வு ஆகும். அந்த வீடியோவில் இருக்கும் மணமக்கள் அஞ்சு – சரத் தம்பதிகளில் மணமகளின் தந்தையின் மறைவிற்கு பின் வறுமையில் இருந்த மணமகளின் பெண்ஜமாத் உதவியை நாடிய பிறகு மசூதியை திருமணமண்டபமாக மாற்றி திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சிச் சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், ஏ.ஆர்.ரகுமான் அவரது பதிவில் தைரியம்! மனிதகுலத்தின் மீதான
அன்பு நிபந்தனையற்றதாகவும், குணப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்
எனப் பதிவிட்டுட் ள்ளார். முன்னதாக 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச்சட்ட
மசோதாவின் போதும் நாடு முழுவதும் இதே போன்றதொரு நிலை தான்
நிலவியது. அப்போது ஏ.ஆர்.ரகுமான் அவரது முழுப்பெயரான அல்லா ரஹ்ஹா
ரகுமான் என்பதுடன் கூடிய விமான பயணச்சீச்ட்டின் புகை ப்படத்தை
பதிவிட்டிட்ருந்தார்.
இந்நிலையில் இப்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையின் போது மசூதியில்
இந்து முறைப்படி நடத்தி வைக்கப்பட்டட் திருமண வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் மத நல்லிணக்கத்தை வெளிக்காட்டுட் ம் விதமாக அவர்
பதிவிட்டுட்ள்ள ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.