தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைவிமர்சனம்
மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.

படக்குழு
இயக்கம்:
மித்ரன் ஆர் ஜவஹர்
தயாரிப்பு:
கலாநிதி மாறன்
வெளியீடு:
ரெட் ஜெயண்ட்
முக்கிய கதாபாத்திரங்கள்:
தனுஷ்,நித்யா மேனன்,ராஷி கண்ணா,பிரியா பவானி சங்கர்,பாரதிராஜா,பிரகாஷ் ராஜ்,முனிஷ்காந்த் சுப்புராஜ்,
அறந்தாங்கி நிஷா
இசை:
அனிருத் ரவிச்சந்தர்
படத்தின் கதை
டெலிவரி பாய் வேலை செய்து வரும் {திருச்சிற்றமபலம்} தனுஷின் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு விபத்தின் காரணமாக தனது அப்பா பிரகாஷ் ராஜிடம் கடந்த 10 வருடமாக பேசாமல் கடும் கோபத்தில் இருந்து வருகிறார். சிறு வயதில் இருந்தே தனுஷின் நெருங்கிய தோழியாக இருக்கும் {ஷோபனா} நித்யா மேனன் தனுஷுடைய நல்லது கெட்டதில் பங்கெடுத்துக்கொள்கிறார்.

ஒரு வீட்டிற்கு உணவை டெலிவரி செய்ய செல்லும் தனுஷ் தனது பள்ளிவருவ ஒருதலை காதலி ராஷி கன்னாவை எதிர்ச்சியாக சந்திக்கிறார். அதன்பின், இருவரும் மீண்டும் பழைய நட்பின் அடிப்படையில் பேச துவங்குகிறார்கள். இருவரும் சற்று நெருங்கி பழக துவங்கியவுடன் தனது காதலை ராஷி கன்னாவிடம் கூறுகிறார் தனுஷ். ஆனால், தனுஷின் காதலை ராஷி கன்னா ஏற்றுக்கொள்ளவில்லை.
இதன்பின், சில நாட்கள் காதல் தோல்வியில் வாடி வரும் தனுஷ், இரண்டாவது முறையாக வேறொரு பெண்ணுடன் காதலில் விழுகிறார். ஆம், தனது தாத்தா பாட்டியின் அழைப்பை ஏற்று உறவுக்கார திருமணத்திற்காக ஊருக்கு செல்லும் தனுஷ், அங்கு பிரியா பவானி ஷங்கரை சந்திக்கிறார். பார்த்தவுடன் அவரை காதலிக்க துவங்கும் தனுஷிற்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

தான் காதலித்து இரு பெண்களும் தன்னை காதலிக்க வில்லை என்று புலம்பும் தனுஷிடம், அவரது தாத்தா பாரதிராஜா ஒரு யோசனை கூறுகிறார். உன் சிறு வயதில் இருந்து உனக்காக, உன்னுடன் மட்டுமே இருக்கும் {ஷோபனா} நித்யா மேனனை காதலிக்க சொல்கிறார். இதன்பின், சற்று தயக்கத்துடன் நித்யா மேனனை காதலிக்க துவங்கும் தனுஷ், சமயம் பார்த்து தனது காதலை நித்யா மேனனிடம் கூறுகிறார். நித்யா மேனன் தனுஷின் காதலை ஏற்று கொண்டாரா? இல்லையா? தனது தந்தையின் மீது தனுஷுக்கு இருந்த கோபம் தணிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தின் சிறப்பு
வழக்கம் போல் நடிப்பில் 100% ஸ்கோர் செய்துள்ளார் தனுஷ். நித்யா மேனன் தனுஷை மிஞ்சும் அளவிற்கு பிரமாதமாக நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் ரசிகர்களின் மனதை வென்றுவிட்டார். இயக்குனர் பாரதிராஜாவின் நடிப்பு சிறப்பு.அனிருத் இசை நம்மளை அறியாமலும் சில இடங்களில் மெய் மறக்க வைக்கும் அளவுக்கு உள்ளது குறிப்பாக மேகம் கருக்குது பாடல் அனிருத் இசை நம்மளை வேற ஏதோ உலகத்திற்கு கூட்டிச் செல்வது போல் இருந்தது மற்றும் படத்தின் நடிகர்களை தேர்வு செய்த விதம் அருமையாக இருந்தது நித்யா மேனன் கதாபாத்திரம் மிக அற்புதமான ஒரு கதாபாத்திரம. இந்த படத்திற்கு பெரும் வலுவை சேர்த்துள்ளது.
படத்தின் சொதப்பல்கள்
திருச்சிற்றம்பலம் படத்தில் புதிய படம் பார்க்கும் ஒரு திருப்தி இல்லை ஏனெனில் ஏற்கனவே தமிழில் ரிலீஸ் ஆன யாரடி நீ மோகினி, விருமன் மற்றும் சில படங்களில் சாயலாக தற்போது நிலவும் மாடர்ன் சூழ்நிலைக்கேற்ப கதையை மாற்றி புதிய படமாக நம்முடைய கொடுத்திருக்கிறார்கள். வலுவான எதிரி இல்லாதது மற்றொரு எதிர்மறை
திருச்சிற்றம்பலத்தில் ஸ்டண்ட் சில்வா எதிரி. ஆனால் அவர் சுருக்கமாக மூன்று காட்சிகளில் தோன்றுகிறார்.
மதிப்பீடு: 3.5/5
ஒரு தடவை சென்று படம் பார்த்து வயிறு குலுங்க சிரித்து விட்டு வரலாம் விட்டு.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.