செய்திகள் | திரை விமர்சனம்

திருவின் குரல் திரைப்படத்தின் திரைவிமர்சனம் | Thiruvin Kural Movie Review

Thiruvin Kural Movie Review

ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் திருவின் குரல். அரசு மருத்துவமனையில் நடக்கும் அட்டூழியங்களை வேறு ஒரு கோணத்தில் சொல்லி இருக்கும் இத்திரைப்படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்.

படக்குழு

இயக்கம்:

ஹரிஷ் பிரபு

தயாரிப்பு:

சுபாஸ்கரன்

வெளியீடு:

லைகா புரொடக்ஷன்ஸ்

முக்கிய கதாபாத்திரங்கள்:

அருள்நிதி
பாரதிராஜா
ஆத்மிகா

இசை:

சாம் சி. எஸ்.

படத்தின் கதை

ஹீரோ அருள்நிதி வாய் பேச முடியாத, காதும் சரியா கேட்காத சிவில் இன்ஜினியராக நடித்துள்ளார். அழகான குடும்பம். அன்பான அப்பா என சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து வரும் அருள்நிதி, தனது அப்பா பாரதிராஜா விபத்து ஒன்றில் சிக்கியதால் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார். அப்போது அங்கு நடக்கும் சில கொலைகளை அருள்நிதி குடும்பத்து குழந்தை ஒருவர் பார்த்துவிடுகிறார்.

Thiruvin Kural Movie Review

அதன் காரணமாக அவருக்கு மருத்துவமனையில் வேலை செய்யும் லிப்ட் ஊழியர், வார்ட் பாய், மார்ச்சுவரியில் இருப்பவர் ஆகியோருடன் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் பாரதிராஜாவுக்கு தவறான ஒரு ஊசியை போட்டு விடுகின்றனர். இதனையடுத்து பாரதிராஜா பிழைத்தாரா? அருள்நிதி குடும்பத்தில் இருபவர்களை கொலை செய்ய நினைக்கும் வில்லன்கள் யார் என்பது தான் மீதி கதை.

Thiruvin Kural Movie Review

படத்தின் சிறப்பு

படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர். குறிப்பாக அருள்நிதி வழக்கம் போல தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்து இருக்கிறார். வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி கேரக்டரில் முகபாவம், நடிப்பு என அனைத்தும் ரசிக்கும் படி இருந்தது. இதுதான் இந்த படத்தின் மொத்த பலமாக இருந்தது. மேலும், அரசு மருத்துவமனையில் நடக்கும் சில அலட்சியங்களை இயக்குநர் அப்பட்டமாக காட்டி இருக்கிறார் இயக்குநர். சில காட்சிகள் புதுசாக இருந்தது.

படத்தின் சொதப்பல்கள்

பின்னணி இசை கூடுதல் பலம் சேர்க்கிறது ஆனால் பாடல்கள் மிகவும் போரடிப்பது போல இருக்கிறது. கதையை மேலும் தொய்வாக்கி விடுகிறது.

அனைவரது நடிப்பும் பிரமாதம்தான் இருந்தாலும் கதை அந்த அளவுக்கு ஆழமானதாக இல்லை. நமக்கே ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பு தட்டி விடுகிறது.

மதிப்பீடு: 2.5/5

அறிமுக இயக்குநர் ஹரீஷ் பிரபு, ஒரு சைக்கலாஜிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார்.

ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

Similar Posts