செய்திகள்

இந்த நாள் மறக்காது, ஏழைகளுடன் கொண்டாடிய பூமி..!

ஆதரவற்றோர் இல்லத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் நடிகை பூமிகாவின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார்

தற்போது பூமிகா அவர்கள் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவருடைய பிறந்த நாளை ஊட்டியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். மேலும், அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்ததுடன் மட்டுமல்லாமல் உணவையும் பரிமாறியிருக்கிறார்.

இப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தும் தன்னுடைய பிறந்தநாளை சமூக அக்கறையுடன் நடிகை பூமிகா கொண்டாடி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது

Similar Posts