திரைப்படங்கள் | செய்திகள்

பெண் என்றால் இப்படித்தான்,வீர மங்கையாக துஷாரா..!

2021 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டைப்பெற்றவர் துஷாரா விஜயன். இதனைத் தொடர்து பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தின்  துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இது குறித்து பேசிய துஷாரா, இந்த படத்தின் ரெனி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறினார். ரெனி எதற்கும் துணிந்தவள், அவள் நினைத்ததை செய்யும் போது அதனை யாருக்காவும் சமரசம் செய்து கொள்ளாத துடிப்பான பென் என்றார். அதே நேரம் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில், மாரியம்மாவாகவும் இல்லாமல் துஷாராவாகவும் இல்லாமல் ரெனியாக வாழ்ந்திருப்பதாக கூறினா்.

யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் பா ரஞ்சித் இணைந்து தயாரித்துள்ள இந்த நட்சத்திரம் நகர்கிறது படம் இம்மாதம் 31ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

Similar Posts