செய்திகள்

தற்கொலைக்கு இதுதான் முடிவாம், இளைஞர்களுக்கு விக்ரம் ..!

‘கோப்ரா’.இப்படத்தின் முன்வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் திருச்சி செண்ட்ஜோசப் கல்லூரியில் ரசிகர்களுடன்  கலந்துரையாடினர். 

நடிகர்  சீயான் விக்ரம் பேசியதாவது, இன்னும் ஒரு வாரத்தில் படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி என்றார் . முடிவில் மாணவர்கள் இணைந்து விக்ரம் அவர்களின் உருவப்படம் வரைந்த பெயிண்டிங்கை பரிசாக அளித்தனர்.

இதை தொடர்ந்து நடிகர் விக்ரம் சில மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு,

மிகவும்  டென்ஷனாக இருக்கும் போது ரசிகர்கள் தொல்லை செய்தால் அதை எப்படி சமாளிப்பீர்கள் என மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விக்ரம், ஒரு போதும் எந்த ஒரு ரசிகரும் தொல்லை கொடுக்கிறார் என நினைத்தது இல்லை. ரசிகர்கள் அன்புக்காகத்தான் ஏங்குகிறோம். ரசிகர்கள் எங்கள் மீது காட்டும் அன்பு கடவுள் எங்களுக்கு கொடுத்த வரமாகத்தான் பார்க்கிறோம். என்னைப்பொறுத்த வரை அவர்கள்தான் எங்களை வாழவைக்கும் கடவுள் என உணர்ச்சிவசமாக பேசினார்.

இப்போதைய இளைஞர்கள் சின்ன விஷயங்களுக்கு கூட தற்கொலை முடிவை எடுக்கிறார்களே இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என எழுப்பப்பட்ட கேள்விக்கு… பதிலளித்த விக்ரம், இந்தத்தலைமுறை அப்படி ஆகிவிட்டார்கள்.  கண்டிப்பாக ஒரு டிகிரி வாங்க வேண்டும் என்பது அவசியமானது தான் அதற்காக படிக்க வேண்டும் என ப்ரெஷரை ஏற்றிக்கொள்ளாதீர்கள், ஒவ்வொரு முறை விழும் போதும் நாம் எழுந்திருக்க வேண்டும். என்னால் நடக்கவே முடியாது. ஆனால் நான் நடக்க ஆரம்பித்து பின் நடிக்கவும் ஆரம்பித்தேன் என தன்னையே உதாரணமாக கூறினார். 

Similar Posts