த்ரில்லர் படமான மிரள் திரை விமர்சனம்..!(Thriller film Miral review)

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் கீழ் இயக்குனர் எம்.சக்திவேல் தயாரித்துள்ள மிரள் திரைப்படத்தின் ட்ரெய்லர் சில காலத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது, இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என பார்ப்போம் வாருங்கள்..
படக்குழு

இயக்கம்:
எம் சக்திவேல்
தயாரிப்பு:
டில்லி பாபு ஜி
வெளியீடு:
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி
முக்கிய கதாபாத்திரங்கள்:
பரத், வாணி போஜன், ராஜ்குமார்,கே.எஸ்.ரவிக்குமார், காவ்யா அறிவுமணி, மீரா கிருஸ்ணன்.
இசை:
பிரசாத் எஸ் என்
படத்தின் கதை

ஒரு இரவில் கணவன் மனைவி காட்டிற்குள் மாட்டிக்கொள்கிறார்கள், அவர்களுக்கு விசித்திரமான மற்றும் மர்மமான சம்பவங்கள் நடக்கின்றது, அதெல்லாம் ஏன் நடக்கிறது என்பதே கதை.
அதாவது ஹரி(பரத்) மற்றும் ரமா (வாணி போஜன்) இவர்கள் தான் அந்த கணவன் மனைவி.இவர்கள் இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்திருப்பார்கள. அவர்களுக்கு ஒரு மகனும் இருப்பான். இப்படி இருக்கையில் ரமாவுக்கு ஒரு கனவு வருகிறது. அதாவது தனது கணவர் இறந்து போவதாக கனவு காண்கிறாள். அதனால் அவள் சங்கடமான நிலையில் எந்த வேலையிலும் கவனமில்லாமல் மன அழுத்தத்துடன் இருக்கிறாள்.

அந்த கனவு அவளை மிகவும் தொந்தரவு செய்ய அந்த கனவை தனது அம்மாவிடம் கூறுகிறாள். அம்மாவும் ஒரு ஜோசியரிடம் சென்று பரிகாரம் கேட்கிறாள். ஜோசியரும் கணவன் மனைவி ஒன்றாக இருக்க முடியாது இதற்கு பரிகாரமாக குல தெய்வ கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என கூறுகிறார்.
அதன் பின் மனைவிக்காக கணவன் ஹரி தனது குடும்பத்துடனும் குல தெய்வ கோயிலுக்கு செல்கிறார். குல தெய்வ கோயிலில் வழிபாடுகள் அனைத்தையும் முடித்த பின் அன்றிரவே ஒரு வேலை காரணமாக கிளம்புகிறார்கள். செல்லும் வழியில் மனைவியின் கனவில் நடந்த அனைத்தும் நடக்கிறது. என்ன தான் நடக்கிறது..? ஏன் அதெல்லாம் நடக்கிறது? ஹீரோ தப்பிப்பாரா..? என்பதே மீதி கதை..

திறமையின் தேடல்
பரத் கொஞ்சமும் பிசகாமல் சினிமாதனம் என்பதை காட்டாமல் சூப்பரா பண்ணிருப்பார். தான் ஒரு குடும்பதலைவன் என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றாற் போல் மெஷேடா அசத்தியுள்ளார் எனலாம். நல்ல பெர்போமன்ஸ் தான் மொத்தத்தில் நடிகர் பரத்.
அதே மாதிரி நடிகை வாணிபோஜன் ஒரு இனசண்டான மனைவி. அவர் ஒரு மன அழுத்த நிலையில் அந்த உணர்வை ரசிகர்களுக்கு தெளிவாக கொடுத்திருந்தார். அவர் செலக்ட் பண்ண பாத்திரத்தை அப்படியே பண்ணியிருந்தார்.
அதன் பின் நம்மை கவரக்கூடிய பெர்போமன்ஸ் என்றால் கே எஸ் ரவிக்குமார். ரொம்பவே இயல்பா உண்மையான நடிப்பு அது. அவர் மகள் தன்னை மீறி திருமணம் செய்தாலும் ஒரு அப்பாவா கோவபட்டும் அதன் பின் மன்னிப்பு கேட்டும் நச்சுரலாக நடித்திருந்தார்.

மற்றும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த மீரா கிருஸ்னன், பொலிஸாக மிரட்டிய அர்ஜய் அதன் பின் பிரண்ட் பாத்திரத்தில் நடிக்கும் ராஜ் குமார் எல்லாருடைய பாத்திரமும் நன்றாக இருந்தது.
முக்கியாக எஸ் என் பிரசாத் அவரது மியூசிக் வேற மாதிரி. அதாவது படம் முழுதும் வரும் த்ரில் பீலை காட்டுவதில் பெரிய உதவியாக இருந்துள்ளது. மற்றும் சுரேஸ் பாலாவின் கேமரா வேலையும் ரொம்ப குவாலிட்டியாக கரெக்ட்டா உள்ளது. சினிமிட்டோ கிராபரும் தனது ஒளிப்பதிவை சிறப்பாக செய்துள்ளார்.
அடுத்து இயக்குனர் சக்திவேல் புதுசு ஆனால் படத்திற்கு என்ன தேவையோ அதை செய்துள்ளார்.
படத்தின் சிறப்பு
பரத், வாணிபோஜன் மற்றும் ரவிக்குமாரின் நடிப்பு
த்ரில்லர் இசை
கமெரா வேலைகள் மற்றும் ஒளிப்பதிவுகள் சிறப்பு
படத்தின் சொதப்பல்கள்
த்ரில்லர் காட்சிகளின் முடிவு.
சில இழுபடும் காட்சிகள் ,சில தேவையற்ற காட்சிகள்.
த்ரில்லர் காட்சிகளின் பின் பிசிறு தட்டுகிறது.
மதிப்பீடு: 2.75/5
படத்தின் பிரச்சனை பெரிதாக ஒன்றும் இல்லை என்பது சில பெயரால் ஏற்றுக்கொள்ளப்படும், சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதுவே இப்படத்தின் பிசிறு தட்டும் காட்சி, மற்றும்படி பார்ப்பவர்களை அங்கு இங்கு நகர விடாமல் கூட்டி செல்லும் இந்த படம்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.