நீங்களா ரொம்ப நினைச்சிராதீங்க, துணிவு பட இயக்குனர்..!(Thunivu film director said Don’t think too much)
அஜித்தின் துணிவு படத்தை இயக்கி உள்ள இயக்குநர் ஹெச். வினோத் அளித்த சமீபத்திய பேட்டி ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
துணிவு படம் ஹெயிஸ்ட் படம் என்றும் த்ரில்லர் என்றும் ஏகப்பட்ட கதைகள் சோஷியல் மீடியாக்களில் வலம் வருகின்றன எனக் கூறிவிட்டு சிரித்த ஹெச். வினோத், அது தான் பிரச்சனையே.. உங்க இஷ்டத்துக்கு ஒரு கதையை கற்பனை பண்ணிட்டு தியேட்டருக்கு வராதீங்க.. அப்புறம் அந்த கதை இல்லைன்னா அப்செட் ஆகி நல்லா இல்லைன்னு சொல்லிடுவீங்க என பேசியிருப்பது ரசிகர்களை சற்றே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இப்படி இயக்குநர் ஹெச். வினோத் ஏன் திடீரென கடைசி நேரத்தில் கட்ஸ் இல்லாமல் பேசுகிறார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்
