தல அஜித்தின் பொங்கல் பரிசு… துணிவு திரை விமர்சனம்..!(Thunivu Movie Review)

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் பொங்கலுக்கான விருந்தாக ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்த திரைப்படம் துணிவு. நள்ளிரவு 1 மணிக்கு ரிலீஸ் ஆகி உலகெங்கிலும் அஜித் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது. வலிமைக்கு பிறகு மாஸ் கொடுப்பதற்காகவே உருவாகிய படத்தை பார்க்கலாம் வாங்க..
படக்குழு

இயக்கம்:
ஹெச்.வினோத்
தயாரிப்பு:
போனி கபூர்(பேவியூ ப்ராஜெக்ட்ஸ் லேப் ஜீ ஸ்டுடியோஸ்)
வெளியீடு:
ரெட் ஜெயண்ட் மூவி
முக்கிய கதாபாத்திரங்கள்:
அஜித்,மஞ்சுவாரியர்,சமுத்திரக்கனி,ஜான் கொக்கன், பிரேம்குமார், வீரா, சிபி சந்திரன்
இசை:
ஜிப்ரான்
படத்தின் கதை
கதையின் ஆரம்பத்திலேயே சென்னை மவுண் ரோட்டில் உள்ள ‘யுவர்ஸ் பேங்க்’ என்ற பேங்கில் இருந்து 1500 கோடி உள்ளது. அதில் 500 கோடி சட்டமில்லாத பணமாகும். அந்த 500 கோடி ரூபா பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல்,உதவி கமிஷனரும் கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள்.அதன்படி வங்கிக்குள் நுழையும் அந்த கும்பல், துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களையும், அங்கிருக்கும் வாடிக்கையாளர்களையும் பணயக் கைதிகளாக்குகிறது.

ஆனால் அவர்கள் வந்த இடத்தில் அவர்களுக்கே தெரியாமல் அந்த பேங்கை அஜித் கொள்ளையடிக்க மஞ்சு வாரியருடன் ஒரு ப்ளான் போட்டு உள்ளே இருப்பது தெரிய வருகிறது. வாடிக்கையாளர் போல வரும் அஜித் வந்த கொள்ளையர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டு, மொத்த வங்கியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். அதன் பின் தான் தெரிகிறது அவருக் கொள்ளையடிக்க வந்திருக்கிறார் என்பது.
அதே சமயம் தங்கள் இரண்டு குரூப்புகளை தவிர மூன்றாவதாக ஒரு அணியும் இதே கொலையில் ஈடுபட்டுக்கொண்டு உள்ளே இருக்கின்றனர் என்கிற விஷயம் அஜித்துக்கு தெரிய வருகிறது. அந்த கொள்ளையர்களை பிடிக்க கமிஷனர் சமுத்திரக்கனி தலைமையில் ஒரு குழு நியமிக்கப்படுகிறது.
அதன் பிறகு அஜித் ஏன் கொள்ளையடிக்கிறார்? அவரின் ப்ளாஷ் பேக் என்ன? சமுத்திரக்கனி கொள்ளையர்களை பிடித்தாரா? அஜித்திக்கும் சமுத்திரகனிக்கும் என்ன தொடர்பு இதற்காக நடக்கும் ஆட்டம் தான் மீதிக்கதை..
திறமையின் தேடல்
ஜாலி கலந்த வில்லத்தனத்துடன் வேறுபட்ட நடிப்பும், வில்லத்தனமான சிரிப்பும், ஸ்டைலிஷ் நடனமும், சிலிர்க்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்துகிறார் நடிகர் அஜித். அஜித்தின் சின்னச் சின்ன நடன அசைவுகளும் அதற்கேற்ற பின்னணி இசையும் ரசிக்க வைப்பதுடன் மொத்த திரையரங்கையும் அதிரவைக்கிறது.ஒரு மரண அடி கொடுத்து மீண்டும் தான் யார் என்பதை ரசிகர்களுக்காக நிரூபித்துக் காட்டி இருக்கிறார் அஜித் என்றே சொல்லலாம்.

நடிகை மஞ்சு வாரியார் அஜித்திற்கு ஏற்றாற்போல் லேடி ஸ்டாராக பிண்ணியுள்ளார். துப்பாக்கி , ஆயுதங்களுடன் திரையை கிழித்து தொங்கவிடும் சிங்கப்பெண்ணாக பாராட்டை பெற்றுள்ளார்.
நேர்மையான கமிஷனராக சமுத்திரக்கனி நடித்துள்ளார். கான்ஸ்டபிளாக மகாநதி சங்கர், வில்லனுக்கு உறுதுணையாக பேங்க் மேனேஜர் ஆக ஜிஎம் சுந்தர், மெயின் வில்லனாக பேங்க் சேர்மனாக ஜான் கொகேன், டிவி நிருபராக நகைச்சுவைக்காக மோகனசுந்தரம், இன்ஸ்பெக்டராக பகவதி பெருமாள் அனைவரும் நடிப்பில் சிறப்பித்துள்ளனர். சென்டிமென்டுகாக அமீர், பாவணி மற்றும் தர்ஷனும், பழைய ஜோக் தங்கதுரையும், அஜய்,வீரா ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கபட்ட கதாபாத்திரங்களை நன்றாக செய்துள்ளனர்.

படத்தின் இயக்குநர், வங்கிகளின் கட்டணக் கொள்ளை குறித்து சிறப்பாக விவரித்து இருக்கிறார். சிறப்பான கதைக்களத்தை அட்டகாசமான ஆக்ஷனுடன் தந்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர், மணி ஹெய்ஸ்ட் பாணி கதை அதனூடே ஒரு சோஷியல் மெசேஜ் என பக்காவான ரூட் பிடித்திருக்கிறார் எச். வினோத். ஜிப்ரானின் பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு இன்னும் பரபரப்பைக் கூட்டுகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவும், விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பும் படத்தின் தரத்தை கூட்ட உதவுகின்றன.
படத்தின் சிறப்பு
அஜித் மற்றும் மஞ்சுவாரியாரின் நடிப்பு
க்ளைமாக்ஸ்,
கதைகரு,
முதல் காட்சி
வசனங்கள் அருமை.

படத்தின் சொதப்பல்கள்
இடைச் செருகலான இசை
இரண்டாம் பாதி கொஞ்சம் ஸ்லோ டவுன்
மதிப்பீடு: 3.4/5
வங்கி நடவடிக்கைகளில் சற்று அவதானமாக செயற்பட வேண்டும் என்ற ஒரு மெசேஜையும் சொல்லி முடித்திருக்கிறார்கள். துணிவும் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து. ஆனால் அஜித் ரசிகர்களுக்கு எப்போதும் விருந்து தான்.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.