மீண்டும் வலம் வரவுள்ள டைட்டானிக் திரைப்படம்..!(Titanic movie coming back)
டைட்டானிக் என்ற மிகப்பெரிய கப்பல் மூன்றே மணிநேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் சுமார் 1500 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 1997 ஆம் ஆண்டு, ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ஆங்கிலத் திரைப்பட டைட்டானிக் வெளியானது. இப்படத்தில், லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலர் நடித்தனர்.
உண்மைக் காதலை மையமாக வைத்து, பெரிய ஆடம்பரப் பயணிகள் கப்பலான டைட்டானிக் மூழ்கிய சோகக் கதையைப் பின்னணியாக வைத்து இப்படம் வெளிவந்து உலக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தது.இப்படம் 11 விருதுகளையும் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்த படமாகும்.
டைட்டானிக் படம் வெளிவந்து 25வது ஆண்டு நிறைவையொட்டி விரைவில் திரையரங்குகளில் மீண்டும் வெளியிட உள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது.
