டோலிவுட் நடிகர் நாக சவுர்யாவின் திருமணம்…!(Tollywood actor Naga Saurya’s wedding)
டோலிவுட் திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் நாக சவுர்யாவிற்கும், பெங்களூருவை சேர்ந்த அனுஷா ஷெட்டிக்கும் பிரமாண்டமாக திருமணம் நடந்துள்ளது.
நாக சவுர்யாவின் நீண்ட கால தோழியான அனுஷா ஷெட்டிக்கும் அவருக்கும் இடையே பெங்களூருவில் பாரம்பரிய முறைப்படி இந்த திருமணம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் முன்னிலையில் நடந்துள்ளது.
திருமணத்துக்கு பின்னர் இந்த ஜோடி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக நாக சவுர்யா, “எனது வாழ்நாள் முழுவதற்கும் உரிய பொறுப்பை உங்கள் முன் அறிமுகப்படுத்துகிறேன்” என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இவர்களுக்கு திரையுலகினரும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.


