செய்திகள் | திரை விமர்சனம்

நடிகர் அதர்வா நடிப்பில் ‘டிரிக்கர் ‘படத்தின் திரைவிமர்சனம் (Trigger movie review)

Trigger movie review

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள ட்ரிக்கர் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது படம் எப்படி இருக்கு வாங்க பாக்கலாம்

படக்குழு

இயக்கம்:

சாம் ஆண்டன்

தயாரிப்பு:

கீழ் பிரதீக் சக்ரவர்த்தி, ஸ்ருதி நல்லப்பா

வெளியீடு:

எஸ்பி சினிமாஸ்

முக்கிய கதாபாத்திரங்கள்:

அதர்வா, தன்யா ரவிச்சந்திரா, ராம்தாஸ், அறந்தாங்கி நிஷா மற்றும் அன்பு

இசை:

ஜிப்ரான்

படத்தின் கதை

அதர்வா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த குருதி ஆட்டம் படம் திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது ட்ரிக்கர் படம் வெளியாகி உள்ளது. கூர்கா, டார்லிங் போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார், இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அதர்வாவை வைத்து 100 என்ற போலீஸ் கதை அம்சம் கொண்ட படத்தினை இயக்கி இருந்தார். ட்ரிக்கர் படத்தில் அதர்வா, தன்யா ரவிச்சந்திரன், சீதா, அருண் பாண்டியன், சின்னி ஜயநாத் என பலர் நடித்துள்ளனர். காவல்துறையில் பணிபுரிந்து வரும் அதர்வா ஒரு கும்பலை பிடிக்கச் செல்லும்போது செய்யும் தவறினால் காவல்துறையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுகிறார். ஆனாலும் கமிஷனர் அதர்வாவிற்கு அனைத்து காவல் நிலையங்களையும் கண்காணிக்கும் ஒரு சிறப்பு வேலையை ரகசியமாக கொடுக்கிறார். அங்கிருந்து அனைத்து காவல் நிலையங்களையும் அதர்வா கண்காணிக்கிறார். ஆர்பனேஜிலிருந்து குழந்தைகளை தத்து எடுத்து அவர்களை விற்கும் கும்பலை பற்றி அதர்வாவிற்கு தெரிய வருகிறது. இந்த கும்பலை தனியாளாக அதர்வா எப்படி பிடிக்கிறார் என்பதே ட்ரிக்கர் படத்தின் கதை.

Trigger movie review

ஒரு இளம் போலீஸ் அதிகாரியாக அதர்வா ட்ரிக்கர் படத்தில் தனது கடும் உழைப்பை போட்டுள்ளார். சண்டை காட்சிகள், சேசிங் என அனைத்திலும் தன்னுடைய முழுத் திறமையும் வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் ஒரு சேசிங் காட்சியில் சிறப்பாக நடித்துள்ளார். ஹீரோயின் தன்யா ரவிச்சந்திரன் கதையை நகர்த்திச் செல்லும் கதாநாயகியாக வருகிறார், தனக்குரிய கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக வரும் அருண்பாண்டியன் அந்த வயதிற்கேற்ற கதாபாத்திரத்தில் நல்ல ஒரு நடிப்பை கொடுத்துள்ளார்.

இதற்கு முன்பு சாம் ஆண்டன் இயக்கிய 100 படத்தைப் போலவே ட்ரிக்கர் படத்திலும் பல புது புது காட்சிகளை வைத்து உள்ளார் இயக்குனர். இது கதையை நகர்த்தி செல்ல உதவுகிறது, ஆரம்ப காட்சி முதல் வில்லன் செய்யும் ஒவ்வொரு வேலைகளும் புதுவிதமாகவும், நம்பும் படியும் உள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக பல காட்சிகளை வைத்துள்ளார் இயக்குனர் சாம் ஆண்டன். ட்ரிக்கர் படத்தில் அருண் பாண்டியன் மற்றும் சின்னி ஜெயநாத் ஆகிய இருவருக்கும் ஹீரோவிற்கு போல ஒரு மாஸ் காட்சிகள் உள்ளது. அதனை அவர்கள் சிறப்பாக செய்துள்ளனர். காவல் நிலையங்களை கண்காணிக்கும் குழுவில் அதர்வாவின் கீழ் அறந்தாங்கி நிஷா, அன்பு தாசன், முனிஸ்காந்த் ஆகியோர் ரசிக்க வைக்கின்றனர்.

Trigger movie review

டெக்னிக்கலாகவும் ட்ரிக்கர் படம் சிறப்பாகவே அமைந்துள்ளது.  ஆர்பனேஜில் இருந்து குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்ற ஒரு புது கதையை சுவாரஸ்யமாக தர முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் சாம் ஆண்டன்.  இந்த கதைக்கு பொருத்தமான ஹீரோவாக அதர்வா சிறப்பாக கையாண்டுள்ளார்.  இந்த புதிய விஷயங்கள் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நல்ல சுவாரசியத்தை அளிக்கிறது.  ஃட்ரிக்கர் படத்தில் ஆங்காங்கே சிறிது தொய்வு இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல தரமான படமாகவே உள்ளது.  

படத்தின் சிறப்பு

ஹீரோவாக அதர்வா சிறப்பாக கையாண்டுள்ளார்

அதர்வா ஜோடியாக தன்யா. காதல் காட்சிகளோ, டூயட் பாடல்களோ இல்லாத ஒரு காதல். அதிகமான காட்சிகள் இல்லையென்றாலும் நிறைவாக வந்து போகிறார்

அதர்வாவின் குழுவில் சின்னி ஜெயந்த், முனிஷ்காந்த், நிஷா இருந்தாலும் எந்த இடத்திலும் அவர் காமெடி என்ற பெயரில் நம்மை கஷ்டப்படுத்தவில்லை

படத்தின் ஆகப்பெரும் ப்ளஸ் ஒளிப்பதிவுதான்.

திலீப் சுப்பராயனோடு சேர்ந்து ஆக்‌ஷன் காட்சிகளில் 360° சுழன்று நம்மைக் கட்டிப் போடுகிறது கிருஷ்ணன் வசந்த்தின் கேமரா.

பாடல்கள் ஒட்டவில்லை என்றாலும், பின்னணி இசையில் ஜிப்ரான், ஒரு ரேஸி ஆக்‌ஷன் த்ரில்லருக்கு உண்டான பதட்டத்தை நமக்குக் கடத்துகிறார்.

படத்தின் சொதப்பல்கள்

ஒரு சில காட்சிகளைத் தவிர்த்திருந்திருக்கலாம்

ஆங்காங்கே சிறிது தொய்வு இருக்கிறது

மதிப்பீடு: 3/5

இந்த படத்தை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.

ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

Similar Posts