செய்திகள்

காஷ்மீரில் குரங்குகளுக்கு பழம் கொடுக்கும் த்ரிஷா | Trisha gives fruit to monkeys in Kashmir

காஷ்மீரில் லியோ படத்தின் சூட்டிங் கடுமையான குளிருக்கிடையில் கடந்த 40 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே விஜய்யுடன் த்ரிஷா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் மிகுந்த வைரலாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விமானநிலையத்தில் பெண் விமானியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.

இதனிடையே தற்போது லியோ சூட்டிங்கிற்காக காஷ்மீரில் இருக்கும் த்ரிஷா, தன்னுடைய ஜன்னலுக்கு பக்கத்தில் இருந்துக் கொண்டு குரங்குகளுக்கு பழங்கள் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது. இந்தப் புகைப்படத்தில் எந்தவிதமான பயமும் இல்லாமல் கேஷுவலான நடிகை த்ரிஷா குரங்குகளின் பக்கத்தில் அமர்ந்தவாறு உள்ளார். இந்தப் புகைப்படம் அதிகமான ரசிகர்களால் விரும்பப்பட்டு அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுவருகிறது.

Trisha gives fruit to monkeys in Kashmir

Similar Posts