செய்திகள் | திரைப்படங்கள்

மாரி செல்வராஜின் படமான வாழையை துவக்கி வைத்த உதயநிதி..!(Udayanidhi launched Mari Selvaraj’s film Vaazhai)

மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படம் “வாழை” என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நான்கு சிறுவர்கள் நடிக்க, கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இன்று தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு படத்தின் படப்பிடிப்பை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார்.

இப்படத்திற்கு தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு ரசிகர்களும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Vaazhai

Similar Posts