இந்தியன் 2 படத்தை தூக்கிவிட்ட உதயநிதி..!
கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க ஒப்பந்தமானது. கடந்த 2019-ம் ஆண்டு இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குஜராத்தில் நடத்தப்பட்டது.
படப்பிடிப்பின் போது கிரேன் கவிழ்ந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை. இப்படம் கிட்டத்தட்ட கைவிடப்படும் சூழலுக்கு சென்றது.
இந்நிலையில், இந்தியன் 2 படம் மீண்டும் உயிர்பெற்று உள்ளது. இதற்கு காரணம், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தான். அவர் தற்போது இப்படத்தில் தயாரிப்பாளராக இணைந்துள்ளார். லைகா நிறுவனத்துடன் சேர்ந்து உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
