திரை விமர்சனம் | செய்திகள்

V3(Vindhya Victim Verdict) திரை விமர்சனம்…!(V3 movie review)

V3 movie review

தமிழ் சினிமாவில் வில்லி மற்றும் நடிகை பாத்திரங்களை ஏற்று பிரபலமாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவரது நடிப்பில் அமுதவாணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் V3 (Vindhya Victim Verdict). வாங்க கதையை பார்க்கலாம்.

படக்குழு

V3 movie review

இயக்கம்:

அமுதவாணன்

தயாரிப்பு:

டீம் ஏ வென்ச்சர்ஸ்

வெளியீடு:

டீம் ஏ வென்ச்சர்ஸ்

முக்கிய கதாபாத்திரங்கள்:

வரலக்‌ஷ்மி சரத்குமார், பாவனா, எஸ்தேர் அனில், ஆடுகளம் நரேன்

இசை:

ஆலன் செபாஸ்டியன்

படத்தின் கதை

ஆடுகளம் நரேன், தனது இரண்டு மகள்களான (பாவனா மற்றும் எஸ்தேர்) எளிமையான ஒரு அழகான‌ வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். பாவனா வேலை செல்லும் பெண்ணாக இருக்கிறார். அவர் ஒருநாள் இரவில் வேலை முடிந்து வீடு திரும்பும் ஐந்து வாலிபர்களால் கற்பழிக்கப்படுகிறார்.

V3 movie review

மகளை காணவில்லை என நரேனும் அக்காவை காணவில்லை என தங்கை எஸ்தர் அணிலும் என இருவரும் சேர்ந்து பாவனாவை தேட அதற்கிடையில் போலீஸ் எரிந்து போன சடலமாக வித்யாவை மீட்கின்றனர்.

இந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீயாக பரவ, கற்பழிக்கப்பட்ட பாவனாவிற்கு நீதி கேட்டு போராட்டம் நடக்கிறது. இதனால், நெருக்கடிக்கும் உள்ளாகும் ஆளும் அரசாங்கம் இந்த வழக்கை முடிக்க நினைக்கிறது. வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி குற்றவாளிகள் 5 பேரையும் என்கவுண்டர் செய்துவிடுகின்றனர்.

அதன் பின் கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்களால் தங்கள் மகன்கள் அப்படிபட்டவர்கள் இல்லை என்று காவல்நிலையத்தில் கதற தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த ஐவர் என்கவுண்டரை விசாரிக்க வழக்கைக் கையில் எடுக்கிறது. அடுத்து இதை கேஸை பற்றி விசாரிக்க முன்னாள் கலெக்டரான வரலக்ஷ்மி, மீண்டும் கலெக்டர் ஆக பதவி ஏற்று அந்த கேஸை விசாரிக்க நியமிக்கப் படுகிறார்.

V3 movie review

வழக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரிடம் விசாரணை நடத்துகிறார் வரலக்‌ஷ்மி. அதன்பிறகு என்ன நடந்தது?பாவனாவின் கொலைக்கு காரணமானவர்கள் யார்? வித்யாவின் கொலைக்கு சரியான தீர்ப்பு கிடைத்ததா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.

திறமையின் தேடல்

வரலட்சுமி சரத்குமார் தனக்கு கொடுக்கப்பட்ட சிவகாமி ஐஏஎஸ் என்ற கதாபாத்திரத்தை மிகவும் மிடுக்காகவும் விவேகமாகவும் செய்து முடித்திருக்கிறார். விந்தியா கதாபாத்திரத்தில் நடித்த பாவனா மிகவும் போல்டாக நடித்திருக்கிறார்.

இந்த கதாபாத்திரத்தில் வேறு யாரும் நடித்திருப்பார்களா என்பது ஒரு கேள்விக்குறி தான். அப்பாவாக ஆடுகளம் நரேன் பார்ப்பவர்களையும் அழ வைத்து விட்டார். விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்தேர் தனது கேரக்டரை செவ்வென செய்து முடித்திருக்கிறார்.

V3 movie review

போலீஸ் அதிகாரியாக கேரக்டரை அப்படியே பிரதிபலித்தவர் பொன்முடி என அனைவரும் ஆகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். சிவா பிரபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. ஆலன் செபஸ்டீன் இசையில், பாடல்கள் ஓகே ரகம்… சோக கீதத்தை சற்று குறைத்திருக்கலாம்.

இயக்குனர் படத்தின் மையக்கருவை மிகவும் வலுவாக கையில் எடுத்திருக்கிறார். கொண்டு செல்லும் விதத்தில் தான் சற்று தடுமாறியிருக்கிறார். கடைசியில் பாலியல் குற்றங்களை தடுக்க பாலியல் தொழில்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லி முடிக்கிறார்.

படத்தின் சிறப்பு

கதை

பின்னணி இசை

கதாபாத்திரங்கள்

ஒளிப்பதிவு

படத்தின் சொதப்பல்கள்

திரைக்கதையில் சறுக்கல்

சோக கீதம் அதிகம்

அதிக பிளாஷ்பேக்

மதிப்பீடு: 2.5/5

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக‌ இயக்குனர் சொல்லும் விஷயம் தான் கதை. குடும்ப திரைக்கதை.

ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

Similar Posts