செய்திகள்

மன உளைச்சலுக்கு சரியான மருந்து, வைகைப்புயல் வடிவேல்..!(Vaikaipuyal Vadivel is the perfect remedy for depression)

சிறுவயதில் இருந்தே நடிப்பின்  மீது கொண்ட ஆர்வத்தால் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்தார் வடிவேலு.தமிழர் உள்ளத்தில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள மாபெரும் நகைச்சுவை கலைஞன் வடிவேலு.


மிகுந்த மன உளைச்சலால் தவிக்கும் அனைவருக்கும் தனது காமெடி காட்சிகளால் மருத்து போட்டவர் வடிவேலு என்றால் அது மிகையாகாது.

வடிவேலுவின் சினிமா பசிக்கு முதலில் தீனி போட்டவர் டி.ராஜேந்தர். 1985-ம் ஆண்டு வெளியான என் தங்கை கல்யாணி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார் வடிவேலு.10 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் பிசியாகிவிட்டார் வடிவேலு.


நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, மாமன்னன் உள்பட கைவசம் டஜன் கணக்கிலான படங்களை வைத்துக்கொண்டு மீண்டும் காமெடி கிங்காக அரியணை ஏறி இருக்கும் வடிவேலு இன்று தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் கடல்போல் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Vaikaipuyal Vadivel

Similar Posts