செய்திகள்

வைரமுத்து பாரதிராஜாவை ச‌ந்தித்து சுகம் விசாரிப்பு…!

 தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் திருச்சிற்றம்பலம் தனுஷுக்கு தாத்தாவாக நடித்து இருந்தார் பாரதிராஜா. அப்படத்தில் காமெடி, எமோஷனல் என இரண்டிலும் கலக்கி உள்ளார் பாரதிராஜா.

இதனிடையே அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அஜீரனக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், பாரதிராஜாவை மருத்துவமனையில் சந்தித்த கவிஞர் வைரமுத்து, அவர் குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Similar Posts