குந்தவைக்கு ட்விட்டர் மூலம் வந்தியத்தேவன் தூது | Vandiyathevan sent a message to Kundavai via Twitter
பொன்னியின் செல்வன் 2 படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பம் 30ம் தேதி இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வெற்றிப் பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது. படத்தின் ப்ரமோஷன் பணிகளை படக்குழுவினர் தற்போதே துவங்கியுள்ளனர்.

முன்னதாக த்ரிஷா, கார்த்தி ஆகியோர் எவ்வாறு குந்தவை மற்றும் வந்தியத்தேவனாக மாற்றம் பெற்றார்கள் என்பதை விவரிக்கும் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இதையடுத்து பர்ஸ்ட் சிங்கிளையும் வெளியிடவுள்ளது. இதற்கான கிளிம்ப்ஸ் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி, த்ரிஷாவை குறிப்பிடும் வகையில் ஹாய் இளையபிராட்டி என்று தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து அங்கிருந்து எந்த பதிலும் இல்லாத நிலையில், என்ன பதிலே இல்லை என்றும் கேட்டார். இதையடுத்து அங்கிருந்து பதில் வந்தது. என்ன வாணர்குல இளவரசே என்று பதிலுக்கு த்ரிஷா ட்வீட் செய்திருந்தார். உடனடியாக தங்களது தரிசனம் கிடைக்குமா என்று பதில் கேள்வி கேட்டிருந்தார் கார்த்தி.

பதிலுக்கு த்ரிஷா ம்ம. யோசித்து செய்தி அனுப்புகிறேன் என்று பதிலளிக்க, கடல் கடந்து சென்று உங்களது ஆணையை நிறைவேற்றி விட்டு வருபவனுக்கு வெறும் மோரை மட்டும் கொடுத்து அனுப்பிவிட மாட்டீர்களே என்று கார்த்தி பதில் கேள்வி கேட்டுள்ளார். இவ்வாறு கார்த்தி மற்றும் த்ரிஷாவின் உரையாடல் அமைந்திருந்தது.