வரலாறு முக்கியம் திரைவிமர்சனம்…! (வரலாறு படைத்ததா )(Varalaru mukkiyam review…! (made history ?)

கோபி வித் காதலுக்கு பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் அறிமுக இயக்குனரான சந்தோஷ் ராஜனின் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் வரலாறு முக்கியம். நகைச்சுவையுடனான காதல் கதையைக் கொண்ட திரைப்படமாம்.
படக்குழு

இயக்கம்:
சந்தோஷ் ராஜன்
தயாரிப்பு:
ஆர். பி. சௌத்ரி
வெளியீடு:
சூப்பர் குட் பிலிம்ஸ்
முக்கிய கதாபாத்திரங்கள்:
ஜீவா, காஷ்மீரா பர்தேஷி, பிரக்யா நாக்ரா, விடிவி கணேஷ் ,கே.எஸ்.ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன் ,விஜி ரதீஷ், சித்திக், சரண்யா பொன்வண்ணன்
இசை:
ஷான் ரஹ்மான்
படத்தின் கதை
நடிகர் ஜீவா யூடியூபராக நடிக்கிறார். படித்து முடித்துவிட்டு வேலை வெட்டி இல்லாததால் யூடியூப் சேனலை தொடங்குகிறார். இவர் ஏற்கனவே ஆரம்பித்த இரண்டு யூடியூப் சேனல்களும் கஷ்டமானதால், மூன்றாவதாக ஒரு சேனலை தொடங்கி கண்டென்டுக்காக அலைந்து திரிகிறார். அதன் பின் கோவை கோயம்புத்தூரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அப்பா கேஸ் ரவிக்குமார் மற்றும் அம்மா சரண்யா பொன்வண்ணனுடன் வசித்து வருகிறார் கார்த்தி (ஜீவா).

இந்த நேரத்தில் தான், கார்த்தி (ஜீவா) வீட்டிற்கு அதே தெருவில் கேரளாவில் இருந்து அக்கா தங்கை காஷ்மிரா மற்றும் பிரக்யாவுடன் ஒரு மலையாள குடும்பம் குடி வருகிறது. காஷ்மீரின் அப்பா தனது மகளை துபாய் மாப்பிள்ளைக்கு மட்டுமே கட்டிக் கொடுப்பேன் என உறுதியுடன் இருக்கிறார்.
ஆனால் (கார்த்தி) ஜீவா அக்கா யமுனாவை (காஷ்மிரா) ஜீவா ஒருதலையாக காதலித்து பிறகு ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அதே நேரம் தங்கை பிரக்யா ஜீவாவை காதலிக்கிறார். அதன் பிறகு யார் யாரை திருமணம் செய்து கொள்கிறார்கள்? அதன்பின்னர் என்ன ஆனது? கடைசியில் இருவரும் இணைந்தார்களா ? என்பது தான் வரலாறு முக்கியம் திரைப்படத்தின் மொத்தக்கதை.
திறமையின் தேடல்
“ஜீவா”வின் தோற்றம் இக்கேரக்டருக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறது. ஜீவா உடைய துள்ளலான நடிப்பு இளைஞர்களை கவர்ந்திருக்கிறது. அவருடைய இயல்பான நடிப்பின் மூலம் காதலிலும், காமெடியிலும் கலக்கியிருக்கிறார்.
நடிகை காஷ்மிரா மிகவும் அழகாகவும் அதே சமயம் நடிப்பையும் நன்றாக வெளிப்படுத்தி உள்ளர். படத்தின் முதல் பாதியில், கதாநாயகியின் தங்கையாக வரும் பிரக்யா நன்றாக நடித்துள்ளார். அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்து பாராட்டை பெற்றுள்ளார்கள்.

மேலும் கே.எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் தங்களது சீனியர் நடிப்பை படத்திற்கு தேவையான அளவு கொடுத்துள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு வி.டி.வி கணேஷும் காமெடியில் கலக்கியுள்ளார்.
பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாக இருந்தது. கதை பெரியதாக இல்லை என்றாலும் காமெடியாக இயக்குனர் கொண்டு சென்றிருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது.
படத்தின் சிறப்பு
ஜீவாவின் நடிப்பு
பின்னணி இசை, ஒளிப்பதிவு
இரண்டாம் பாதி காமெடி காட்சிகள்
ஜீவா மற்றும் வி டிவி கணேஷ் காம்போ

படத்தின் சொதப்பல்கள்
ஸ்கின் பிளே ,
கொஞ்சம் சொதப்பிய கிளைமாக்ஸ் காட்சி,
சில லாஜிக் குறைபாடு,
சுவாரஸ்யம் குறைவு
மதிப்பீடு: 2.5/5

ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட கதை என்றாலும் பெரிதாக எங்கும் போர் அடிக்காத இந்த படத்தில் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை கலகலப்பாகவே படம் சென்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.