செய்திகள்

வாரிசு, துணிவு ரெண்டுமே ரெட் ஜெயண்ட் கையில் தான்..!(Varisu and Thunivu are both in the hand of Red Giant)

2023ல் ஆவது அஜித், விஜய் படங்கள் ஓடுமா இல்லை மீண்டும் சொதப்புமா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன. இந்நிலையில் வரும் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரு பெரிய படங்கள் வெளியாக உள்ள நிலையில்,

அஜித்தின் துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் வெளியிட உள்ள நிலையில், விஜய்யின் வாரிசு படத்துக்கு கணிசமான தியேட்டர்கள் கிடைக்காது என சர்ச்சைகள் கிளம்பின.

வாரிசு படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள செவன் ஸ்க்ரீன் தற்போது எந்த எந்த ஏரியாவில் எந்த எந்த விநியோகஸ்தர்கள் வாரிசு படத்தை வெளியிட உள்ளனர் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், முக்கிய நகரங்களில் வாரிசு படத்தின் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனமே பெற்றுள்ளது என்கிற அதிரடி அறிவிப்பை செவன் ஸ்க்ரீன் தற்போது வெளியிட்டுள்ளது.

Varisu and Thunivu
Varisu and Thunivu

Similar Posts