ஒரே திகதியில் களமிறங்கவுள்ள வாரிசு மற்றும் துணிவு..!(Varisu and Thunivu to be fielded on the same date)
பொங்கலுக்கு தமிழ் சினிமா முன்னணி நடிகர்களான நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும், நடிகர் அஜித்குமாரின் துணிவு வெளி வரவுள்ளது.
இந்த நிலையில் இரண்டு படங்களின் தணிக்கை முடிந்து சான்றிதழ் பெற்றபின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்த்திருந்தனர்.
நேற்று மாலை வாரிசு படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களில் துணிவு படம் ஜனவரி 11 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார்.
இந்நிலையில் ஜனவரி 11 அன்று வாரிசு வெளியீடு என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
