பெரும் எதிர்பார்ப்பில் வாரிசு இசை வெளியீட்டு விழா..!(Varisu audio launch party with great anticipation)
இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் ‘வாரிசு’ பெரும் எதிர்பார்ப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதுவரை வாரிசு படத்தின் முதல் 3 சிங்கிள் பாடல்கள் வெளியாகியுள்ளன.
இந்த 3 பாடல்களை தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 4 மணிக்கு இந்த விழா துவங்க உள்ளது.
நேரு உள் விளையாட்டரங்கில் இசையமைப்பாளர் தமன் நேரில் சென்று அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் தமன் பகிர்ந்துள்ளார்.

