கண்ணழகி நடிகை விவாகரத்து குறித்து வாரிசு பட வில்லன்..!(Varisu movie villain about with Kannazhaki actress’s divorce)
கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் 90 காலக்கட்டத்தில் நடித்து வந்தார் நடிகை சிவரஞ்சனி.பின் 1997ல் நடிகர் ஸ்ரீகாந்த் மேகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி ரோஷன் மேகா, மேதா ஸ்ரீகாந்த், ரோஷன் ஸ்ரீகாந்த் என்ற இரு மகன் ஒரு மகளை பார்த்து வந்துள்ளனர். கண்ணழகி என பெயரிடப்பட்ட நடிகை சிவரஞ்சனியை நடிகர் ஸ்ரீகாந்த் மேகா விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த தகவல் பொய்யென்றும் செல்போனில் வந்த தகவல்களை எனக்கு காண்பித்து வருத்தமும் பட்டுள்ளார்.
இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நான் ஆறுதலாக கூறியிருக்கிறேன் என்று நடிகர் ஸ்ரீகாந்த் மேகா கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை பார்க்க சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார் சிவரஞ்சனி. சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மேகா நடிக விஜய்யின் வாரிசு படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
