செய்திகள் | திரை விமர்சனம்

வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்(Vendhu Thanindhathu Kaadu movie review)

Vendhu Thanindhathu Kaadu movie review

கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் சிம்பு நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு வாங்க பாக்கலாம்

படக்குழு

இயக்கம்:

கௌதம் வாசுதேவ் மேனன்

தயாரிப்பு:

ஐசரி கே. கணேஷ்

வெளியீடு:

ரெட் ஜெயண்ட்

முக்கிய கதாபாத்திரங்கள்:

சிலம்பரசன், சித்தி இத்னானி

இசை:

ஏ.ஆர்.ரஹ்மான்

படத்தின் கதை

கௌதம் மேனன் சிம்பு மற்றும் ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி உள்ளது வெந்து தணிந்தது காடு. தந்தையில்லாமல் தாய் ராதிகா மற்றும் தங்கையுடன் கிராமத்தில் வாழ்த்து வருகிறார் முத்துவீரன் { சிலம்பரசன் }. காட்டு வேலை செய்து வரும் சிம்பு ஒரு நாள் காட்டுக்குள் பரவிய தீயில் சிக்கிக்கொண்டு, போராடி காயங்களுடன் அதிலிருந்து தப்பிக்கிறார். காட்டை சிம்பு தான் கொழித்துவிட்டதாக நினைத்துக்கொண்டு காட்டின் முதலாளி சிம்புவிடம் நஷ்டத்திற்கு பணம் கேட்டு வந்து நிற்கிறார்.

அதெல்லாம் தர முடியாது என்று சிம்பு சொல்ல, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. அந்த வாக்குவாதத்தில் பேசாமல் போய்விட இல்லையெனில் உன்னை கொன்று விடுவேன் என்று முதலாளியை பார்த்து சிம்பு கூற, அது தாய் ராதிகாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. ஏற்கனவே சிம்புவின் ஜாதகத்தில் அவன் கண்டிப்பாக கொலை செய்வான் என்று இருக்கிற காரணத்தினால், இனி தன் மகன் இந்த ஊரில் இருந்தால் தவறான பாதையில் சென்று விடுவானோ என்று எண்ணி சிம்புவின் மாமா அதாவது தனது அண்ணன் மூலம் சிம்புவை மும்பைக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார் ராதிகா.

Vendhu Thanindhathu Kaadu movie review

முதல் பாதி முழுக்கவே சிம்புவின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாகவும் அழகாகவும் காட்டியிருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். ஒரு சாதாரண இளைஞன் தன் சொந்த ஊரிலிருந்து வேறு ஒரு மாநிலத்திற்கு வேலைக்கு சென்றால் எப்படி இருப்பானோ, அதை அப்படியே திரையில் காட்டியிருக்கிறார். 19 வயது பையனாக வர வேண்டும் என இயக்குநர் கேட்டதும், உடல் எடையை குறைத்துக் கொண்டு அதே போல வந்து நின்றதாகட்டும், கொஞ்சம் கொஞ்சமாக மும்பையில் அவருக்கு வயசாகிறது என்பதை தோற்றத்தில் காட்சிகளாக காட்டியது மற்றும் அப்பாவித்தனம் நிறைந்த சாதாரண முத்துவாக பரோட்டா கடையில் இருக்கும் காட்சிகளில் புதுவிதமான சிம்புவை ரசிகர்களுக்கு கண் முன் காட்டி மிரட்டுகிறார். அவரது எதார்த்தமான நடிப்பு முத்து என்ற கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. முதல் பாதி முழுக்கவே தனது பேச்சு மற்றும் உடல் மொழியில் அசத்தியிருக்கிறார். கதாநாயகியாக வரும் சித்திக்கு முதல் பாதையில் பெரிய வேலை எதுவுமில்லை என்றாலும் கதைக்கு முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இருக்கிறார். அம்மாவாக வரும் ராதிகா சில காட்சிகளே என்றாலும் தன் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். 

Vendhu Thanindhathu Kaadu movie review

இரவு மாமா வீட்டிலேயே தங்கும் சிம்புவிடம் அவரது மாமா ஒரு கடித்தை கொடுத்து இதை எப்படியாவது போஸ்ட் செய்து விடு என்று நடுராத்திரியில் பதட்டத்துடன் சொல்கிறார். காலையில் கண்விழிக்கும் சிம்புவிற்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவென்றால், தன்னை மும்பைக்கு அனுப்பி வைப்பதாக கூறிய தனது மாமா, தூக்குமாட்டிக்கொண்டு இறந்து போகிறார். தனது மாமாவின் இறப்பையும் தாண்டி மும்பை செல்வதில் உறுதியாக இருந்த சிம்பு மாமாவிடம் இருந்த துப்பாக்கியை துணையாக நினைத்து அதை கையோடு எடுத்துக்கொண்டு மும்பைக்கு செல்கிறார்.

அந்த விலாசத்தில் இருந்தபடி இசக்கி புரோட்டா கடைக்கு செல்லும் சிம்பு படிப்படியாக ஹோட்டல் வேலைகளை கற்றுக்கொண்டு சமையல்காரன் ஆகிறார். மும்பையில் வேலை மட்டுமின்றி காதலையும் தேடி பிடிக்கிறார் சிம்பு. ஆம், கதாநாயகி பாவையை { சித்தி இத்தானி } பார்க்கும் சிம்பு காதலில் விழுகிறார். சற்று காதலில் திளைத்திருந்த சிம்புவிற்கு மற்றொரு பேரதிர்ச்சி காத்திருந்தது. தான் வந்து சேர்ந்த இடம் ஹோட்டல் மட்டுமில்லை அது ஒரு கேங்ஸ்டர் இடம் என்றும் கொலை செய்யவும் அஞ்ச மாட்டார்கள் என்றும் தெரிந்துகொள்ளும் சிம்பு உடனடியாக அங்கிருந்து புறப்படுகிறார்.

Vendhu Thanindhathu Kaadu movie review

ஹோட்டலில் இருந்து புறப்படும் வேளையில் இசக்கி கேங்கை கொல்ல எதிர் கேங்கில் இருந்து ஆட்கள் ஹோட்டலில் நுழைந்து விடுகிறார்கள். தன்னை தாக்க வருபவர்களை அடிக்கும் சிம்பு, ஒரு கட்டத்தில் அவர்களை சமாளிக்க முடியாது என்று எண்ணி தன்னுடன் எடுத்த வந்த துப்பாக்கியை எடுத்து ஒவ்வொருவரையும் சுட்டு கொல்கிறார். தன் வாழ்க்கையில் எது நடக்கக்கூடாது என்று நினைத்தாரோ அதையே சிம்பு செய்துவிட்டார். இதனால், அவர் சந்தித்த விளைவுகள் என்னென்ன? அதன்பின் அவருக்கு வந்த இன்ப துன்பங்கள் என்னென்ன? என்பதே படத்தின் மீதி கதை..

படத்தின் சிறப்பு

ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை

சிம்புவின் அபாரமான நடிப்பு படத்தை தூக்கி நிறுத்துகிறது.

ஹீரோயின் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

ஜெயமோகனின் கதை

படத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள்

இயக்குனர் கவுதம் மேனனின் மிரட்டலான இயக்கம், அழகான திரைக்கதை

மிரட்டலான சண்டை காட்சிகள்

காஸ்ட்யூம் டிசைன்

இண்டர்வல் காட்சி, கிளைமாக்ஸ் காட்சி

இயக்குனர் கவுதம் மேனன் மீண்டும் தனது வெற்றி கூட்டணியை நிலைநாட்டியுள்ளார். சிறப்பான கதையை அமைத்துக்கொடுத்த ஜெயமோகனுக்கு நன்றி. திரைக்கதை, இயக்கம் என பின்னியெடுக்கிறார் கவுதம் மேனன். படம் மெதுவாக நகர்ந்தாலும் சலிப்பை ஏற்படுத்தவில்லை.

 பாடல்கள் இடம்பெற்றாலும் அனைத்தும் கதைக்குள் அடங்குகிறது. குறிப்பாக இப்படத்தில் எந்த ஒரு வாய்ஸ் ஓவரும் இல்லை. அதுவே படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் இரண்டையும் வெறித்தனமாக செதுக்கியுள்ளார் கவுதம் மேனன். வெந்து தணிந்தது காடு பார்ட் 1 முடிவடைத்திருந்தாலும், பார்ட் 2 இனிமேல் தான் ஆரம்பம் என்று மாஸாக படத்தை முடித்துள்ளார்.

படத்தின் சொதப்பல்கள்

ஆங்காங்கே மெதுவாக செல்லும் திரைக்கதை. ஆனால், அது படத்திற்கு தேவையானதாக மட்டுமே அமைந்துள்ளதால் அதை மைனஸ் பாயிண்டாக எடுத்துக்கொள்ள முடியாது.

சிலருக்கு இப்படம் மிகவும் மெதுவாக செல்வது போல் இருக்கும், ஒரு சிலருக்கு அதுவும் பிடித்து போகலாம்.

மதிப்பீடு: 3.5/5

சிம்புவின் வித்தியாசமான நடிப்புக்காக தாராளமாக இந்த படத்தை தியேட்டரில் பார்க்கலாம்.

ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

Similar Posts