விடுதலை படத்தின் நாயகி பவானி ஸ்ரீயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் | Viduthalai movie heroine Bhavani Sri’s Latest Photos
பவானி ஸ்ரீ ஒரு மாடல் மற்றும் நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பணியாற்றி வருகிறார். அவர் நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் சகோதரி மற்றும் இசை அமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் ஒரு உதவி இயக்குநராக உள்ளார் மற்றும் Zee5 இல் தெலுங்கு வெப் சீரிஸ் ‘High Priestess’ தனது நடிப்பில் அறிமுகமானார்.

பி விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த கா பே ரணசிங்கம் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். அதனை தொடந்து பாவ காதைகள் நாடகத் திரைப்படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் விடுதலை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற 30ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.











