செய்திகள் | திரை விமர்சனம்

விடுதலை 1 படத்தின் திரைவிமர்சனம் | Viduthalai Movie Review

Viduthalai Movie Review

வெற்றிமாறன் இயக்கத்தில் எல்ரெட் குமார் தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மேலும் இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முதல் முறையாக கதையின் நாயகனாக சூரி நடித்து இன்று வெளிவந்துள்ள விடுதலை 1 திரைப்படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்
.

படக்குழு

இயக்கம்:

வெற்றிமாறன்

தயாரிப்பு:

எல்ரெட் குமார்

வெளியீடு:

ரெட் ஜெயண்ட் மூவிஸ்

முக்கிய கதாபாத்திரங்கள்:

சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன்

இசை:

இசைஞானி இளையராஜா

படத்தின் கதை

வெளிநாட்டைச் சேர்ந்த சுரங்க நிறுவனம் ஒன்று அருமபுரி என்ற காட்டில் உள்ள கனிம வளங்களை எடுத்துக் கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான வேலைகளில் அந்த தனியார் நிறுவனம் மும்முரமாக ஈடுபட தயாராகின்றது. அந்த நேரத்தில் இங்கே கனிம வளங்களை எடுக்கக் கூடாது என மக்கள் இதனை எதிர்த்து போராடுகின்றனர்.

Viduthalai Movie Review

மேலும் இந்தப் போராட்டத்தின் தலைவனாக நடிகர் விஜய் சேதுபதி இருக்கிறார். இதில் மக்கள் படையிலும் எண்ணிலடங்காத உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. அதே போல் சிறப்பு படையை சேர்ந்த காவல் அதிகாரிகளும் இறக்கிறார்கள். இப்படி 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்கத்தை எதிர்த்து பெருமாள் வாத்தியார் போராடி வருகிறார். இந்த நேரத்தில் சிறப்பு படையில் ஜீப் ட்ரைவாக வந்து சேர்கிறார் கதையின் நாயகன் சூரி { குமரேசன் }.

Viduthalai Movie Review

முதலில் மலை பகுதியில் இருக்கும் Check Postல் பணிபுரியும் அதிகாரிகளுக்கு ஜீப் மூலம் சாப்பாடு கொண்டு செல்லும் வேலையை தான் பார்க்கிறார் சூரி. இந்த சமயத்தில் மலை பகுதியில் வாழும் தமிழரசி { பவானி ஸ்ரீ } எனும் பெண்ணின் மீது காதலில் விழுகிறார். ஒரு பக்கம் காதல் ட்ராக் ஓடிக்கொண்டிருக்க மற்றொரு புறம் பெருமாள் வாத்தியாரை தேடுதல் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Viduthalai Movie Review

இதற்காக புதிய அதிகாரியாக நியமனம் செய்யப்படுகிறார் கவுதம் மேனன் { DSP சுனில் மேனன் } . இந்த நிலையில், ஒரு நாள் பெருமாள் வாத்தியார் தங்கியிருக்கும் இடத்தை சூரி பார்த்துவிடுகிறார். இதனை பல முறை மேல் அதிகாரிகளிடம் சொல்ல முயற்சி செய்தும் அதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

Viduthalai Movie Review

ஆனால், ஒரு நாள் இதை தன்னுடைய மேல் அதிகாரியான கவுதம் மேனனிடம் கூறி, பெருமாள் வாத்தியாரை பிடிக்க அவர் பதுங்கியிருக்கும் இடத்திற்கு அதிகாரிகளுடன் சூரி செல்கிறார். இதன்பின் என்ன நடந்தது..? 25 ஆண்டுகளாக எந்த ஒரு அதிகாரியாலும் பிடிக்க முடியாத பெருமாள் வாத்தியாரை சூரி பிடித்தாரா? இல்லையா? பெருமாள் வாத்தியாரின் மீது சுமத்தப்பட்டிருக்கும் பழிகள் எல்லாம் உண்மை தானா? என்பதே மீதி கதை.

படத்தின் சிறப்பு

வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் என்பதை மீண்டும் இந்தப் படத்தின் மூலம் அழுத்தமாக நிரூபித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக வரும் சூரி எதார்த்தனமான நடிப்பில் கைதட்டல்களை அள்ளுகிறார்.விடுதலை திரைப்படம் சூரிக்கு திருப்புமுனை படமாக இருக்கும். தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கின்றார் விஜய் சேதுபதி.

நாயகி பவானிஸ்ரீ மலை வாழ் பெண்ணாகவும் காவல் துறை வன்முறையால் ஒடுக்கப்பட்டு, போலீஸ் சூரியுடனே தயங்கித் தயங்கி காதலில் விழுவது என அழகாக தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

முதன்முறையாக வெற்றிமாறன் – இளையராஜா இந்தப் படத்துக்காக கூட்டணி சேர்ந்துள்ள நிலையில் ஏற்கெனவே பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்து ஹிட் அடித்துள்ளன. அதேபோல் பாடல்கள் படத்திலும் சரியான இடத்தில் பொருந்திப் போய் படத்துக்கு அழகு சேர்க்கின்றன. இளைய ராஜாவின் பின்னணி இசை மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.

சில தொய்வுகள் இருந்தாலும் மிரட்டும் திரைக்கதை, படத்தில் இடம்பெறும் வசனங்கள் என கதைக்களத்தை நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

படத்தின் சொதப்பல்கள்

சில தொய்வுகள்

மதிப்பீடு: 3.75/5

மீண்டும் மீண்டும் தன்னுடைய இயக்கத்தின் மூலம் படம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறார் இயக்குனர் வெற்றிமாறன். ‘விடுதலை’ படமானது ரசிகர்களுக்கு பிடித்த ஒரு கதையம்சத்தை கொண்டதாக அமைந்திருக்கின்றது.

ஒவ்வொரு ரசிகனுக்கும் வேறு விதமான ரசனை இருக்கும். திரை விமர்சனத்தால் ஒரு படத்தை அளவிட முடியாது. எனவே நீங்களும் ஒருதடவை படத்தைப்பார்த்து உங்கள் விமர்சனத்தை பின்னூட்டத்தின் ஊடாக எமக்கு அனுப்புங்கள்.

Similar Posts