ஆதாரங்களை சமர்ப்பித்து முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ்-நயன்தாரா..!(Vignesh-Nayanthara ended by submitting evidence)
விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி திருமணம் ஆன 4 மாதத்திலேயே இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டுள்ளதால், தடையை மீறி செயல்பட்டதாக பல தகவல்கள் பரவியது.
இவர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் விசாரணை செய்யப்பட்டதை தொடர்ந்து, நயன்தாரா – விக்னேஷ் சிவனிடமும் விசாரணை நடந்துள்ளது.
அப்போது இவர்கள் விசாரணை குழுவிடம் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கடந்த டிசம்பர் மாதமே வாடகை தாய்முறையில் குழந்தை பெறும் முறை ஒப்பந்த பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கூறி வாடகை தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.