நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன்! வைரலான பதிவு | Vignesh Shivan with Nayanthara & Kids! Viral post
‘போடா போடி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் விக்னேஷ் சிவன். இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இதனை அடுத்து கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தமக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளளதாக அறிவித்திருந்தனர்.வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கும் பெற்றோராக மாறியுள்ளார்.

பல சர்ச்சைகளின் பின்னர் இந்த குழந்தை விவகாரம் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. அத்தோடு குழந்தை பிறந்ததில் இருந்து இருவரும் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர். அத்துடன் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே அஜித்தின் ஏகே62 படத்தை இயக்கும் வாய்ப்பு கைநழுவிப்போன நிலையில் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் விக்னேஷ் சிவன். அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை அவர் விரைவில் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி கோல்டன் கோவிலுக்கு சென்றிருந்த புகைப்படங்கள் வைரலானது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகுந்த ஆக்டிவுடன் காணப்படுகிறார் விக்னேஷ் சிவன். தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய குழந்தைகள் மற்றும் நயன்தாராவுடன் கைகள் பிணைத்தபடியான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நம்முடைய விருப்பமானவர்களிடம்தான் நம்முடைய சந்தோஷம் அடங்கியுள்ளதாகவும் அவர் கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.